பிரீமியம் ஸ்டோரி

டெல்லியின் முதல்வராக மூன்றாவது முறை அரியணை ஏறியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ‘ஹாட்ரிக்’ வெற்றியால் நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளனர். இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் வசீகரனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“டெல்லியில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராக எப்படி உணர்கிறீர்கள்?”

“இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழகத்தில் கணிசமான மக்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. ‘தமிழகத்தில் எப்போது தயாராகப்போகிறீர்கள்?’ என்று கேட்கின்றனர். டெல்லி வெற்றி, தமிழகத்திலும் உற்சாகத்தைப் பாய்ச்சியிருக்கிறது.”

“ `சி.ஏ.ஏ உள்ளிட்ட பல விஷயங்களில் கெஜ்ரிவால் அமைதி காக்கிறார்’ என்ற விமர்சனம் எழுகிறதே?”

“அரசின் அடாவடியான போக்குகளை நாங்கள் கண்டிக்காமல் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் அதைத் தவிர்த்திருந்தோம். இந்தத் தேர்தலுடன் எங்கள் கட்சியை முடிக்கப்பார்த்தார்கள். பா.ஜ.க-வின் அராஜகங் களுக்கு தேர்தல் நேரத்தில் எதிர்வினை ஆற்றியிருந்தால், கண்டிப்பாக அது எங்களுக்கு எதிராக முடிந்திருக்கும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். இனிமேல் கெஜ்ரிவாலின் அதிரடிகளைக் காணலாம்.”

வசீகரன்
வசீகரன்

“ `கெஜ்ரிவால் இந்துத்துவ மிதவாதி’ என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறதே?”

“இப்படியோர் அவதூறைப் பரப்புவது பா.ஜ.க-தான். இந்துத்துவத்தில் மிதவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் கிடையாது. கெஜ்ரிவால் ஓர் இந்து; கடவுள் பக்தியுள்ளவர். அதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார். அதில் என்ன தவறு?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஆனால், ‘டெல்லி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், ஷாகின் பாக்கை ஒரே நாளில் காலிசெய்திருப்போம்’ என்று கெஜ்ரிவால் சொன்ன கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?”

“அதை பாசிட்டிவான கோணத்தில் பார்க்க வேண்டும். ‘பேசிச் சரிசெய்திருப்பேன்; பிரச்னைகளைத் தீர்த்திருப்பேன்’ என்ற அர்த்தத்தில்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.”

“தமிழகத்தில், ஆம் ஆத்மி ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியில் இருந்த பல களச்செயற்பாட்டாளர்கள் தற்போது இல்லையே?”

“உண்மைதான். வெளியேறியவர்கள் அனைவரும் ‘உடனடியாக அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும்’ என்று எதிர்பார்த் தவர்கள். நம் சமூகச்சூழலை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதனால் தான் வெளியேறிவிட்டனர். ஆனாலும், எல்லாவற்றையும் மீறி தமிழகத்தில் எங்கள் கட்சி வலுவடைந்து வருகிறது.”

“2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுமா... போட்டியிட்டால் தனித்துப் போட்டியா, கூட்டணியா?”

நிச்சயமாகப் போட்டியிடும். அப்போதைய சூழல்தான் யாருடன் கூட்டணி என்பதைத் தீர்மானிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு