Published:Updated:

“ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு!” - குஷ்பு ஓப்பன் டாக்

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

எனக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைப் பற்றி மட்டும்தான் பேசுவேன்.

“ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு!” - குஷ்பு ஓப்பன் டாக்

எனக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைப் பற்றி மட்டும்தான் பேசுவேன்.

Published:Updated:
குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்’ என்று கருத்து தெரிவித்து, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரையும் அதிரவைத்தவர் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவி குறித்தான பேச்சுகள் மீண்டும் சூடுகிளப்பிவரும் சூழலில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘ `நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என உங்களைப்போலவே பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்திருக்கிறாரே?’’

‘‘பிரியங்கா காந்தி இந்தக் கருத்தை இப்போது சொல்லவில்லை... கடந்த வருடம் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தபோதே சொல்லிவிட்டார். அப்போதெல்லாம், பா.ஜ.க-வினர் தூங்கிக்கொண்டிருந்தார்களா என்ன? வேண்டுமென்றே இப்போது இந்தச் செய்தியைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர். கொரோனா, சீன எல்லைப் பிரச்னை, பிரதமர் நிதியில் சேரும் பணம் எங்கே செல்கிறது... என நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல், மக்களைத் திசைதிருப்பவே இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி பற்றிய அக்கறை இவர்களுக்கு எதற்கு?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ ‘ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட்’ என்ற கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’

‘‘அது நேரடியாக நான் தெரிவித்த கருத்து இல்லை. `இவர்களில் ஒருவரைத் தலைவராக்கலாம்’ என்ற பேச்சு, கட்சியில் கடந்த வருடமே இருந்தது. மற்றபடி என்னைப் பொறுத்தவரையில், ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வர வேண்டும். அவருக்கு விருப்பம் இல்லையெனில், யார் தலைவர் என்பதைக் கட்சியின் வொர்க்கிங் கமிட்டிதான் முடிவுசெய்ய வேண்டும்!’’

‘‘காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்குப் பஞ்சமா... ஏன் நேரு குடும்பத்துக்குள்ளிருந்து மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’’

‘‘அப்படி நாங்கள் யாரும் சொல்லவில்லையே... கட்சியின் வொர்க்கிங் கமிட்டி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படிதானே தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்... மற்றபடி எங்கள் கட்சியில், தலைவர்களுக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், சோனியா காந்தி எப்போதோ பிரதமராகியிருப்பார். ராகுல் காந்தி, தலைவர் பதவியையே ராஜினாமா செய்தவர். ஆக, பதவிக்கு ஆசைப்படாத நேர்மையான தலைவர்கள்மீதுதான் நாங்களும் நம்பிக்கைவைத்திருக்கிறோம். அதனால் அவர்களே தலைவராக வர வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்!

தமிழிசை சௌந்தர்ராஜன் மாநில பா.ஜ.க தலைவராக இருந்த காலத்தில், ஓர் இடத்தில்கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவைவிடவும் குறைந்த வாக்குகள்தான் வாங்கினார்கள். ஆனால், அப்போதும்கூட தன் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆக, தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யவும் ஒரு தைரியம் வேண்டும். அது அவர்களுக்கு இல்லை!’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொது சிவில் சட்டங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் வரவேற்கிறீர்களா?’’’

‘‘நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். ஆனால், மத்திய அரசு புதிதாக ஒரு கொள்கை - சட்டத்தைக் கொண்டுவரும்போது அதை முழுமையாகப் படித்துப் பார்த்து, புரிந்துகொண்டுதான் என் தனிப்பட்ட ஆதரவைத் தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தை மதிக்கிற எங்கள் கட்சி, அதற்கான சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கிறது.’’

குஷ்பு
குஷ்பு

‘‘புதிய கல்விக் கொள்கையிலுள்ள இந்தித் திணிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?’’

‘‘புதிய கல்விக் கொள்கையைப் படிக்கிறபோது, அதில் எங்கேயும் இந்தி மொழியைத் திணிப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்கலாம். அதே சமயம் நாடு முன்னேற வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறை தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே பறந்து செல்ல வேண்டாமா? தமிழ் மொழியை நானும் உயிராக நேசிக்கிறேன். ஆனால், தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், இந்திக்கு எதிராகவும் பேசுகிறவர்களின் வீட்டுப் பிள்ளைகள் தமிழில்தான் படித்து வருகிறார்களா?’’

‘‘கட்சிக் கொள்கைக்கு நேர் எதிராக இதுபோன்ற கருத்துகளைச் சொல்கிறபோது, கட்சிக்குள்ளிருந்து நெருக்கடி அதிகரிக்காதா?’’

‘‘காங்கிரஸ் கட்சிக்குள் நான் வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. கட்சிரீதியாக எந்தவொரு விஷயத்தையும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. அதேசமயம் கட்சித் தரப்பிலான எல்லா விஷயங்களுக்கும் என்னால் தலையாட்ட முடியாது. என் மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அந்தக் கருத்தைத் தனிப்பட்ட முறையில் நான் பேசுவேன். அதற்காக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான நீங்களே, எதிர்க் கருத்தை கொண்டிருக்கும்போது, கட்சியின் கொள்கைகளை எப்படி வீரியமாக எடுத்துச் செல்ல முடியும்?’’

‘‘எனக்கு எது சரியென்றுபடுகிறதோ, அதைப் பற்றி மட்டும்தான் பேசுவேன். மற்றபடி கொள்கைரீதியாக நான் எப்போதும் கட்சியுடனேயேதான் இருக்கிறேன்.’’

‘‘உங்கள் இருப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பதிவுசெய்வதற்காகவே இது போன்று முரண்பட்டு பேசிவருவதாகக் கட்சியினர் சொல்கிறார்களே..?’’

‘‘எனக்குத் தேவையில்லாதவர்கள் சொல்கிற கருத்துகளைப் படிப்பதும், அதற்கு பதில் கொடுத்து அவர்களைப் பெரிய ஆளாக்குவதும் எனக்கு அவசியம் இல்லாதது!’’

‘‘தமிழக அரசுக்கு ஆண்மை இருக்கிறதா, இல்லையா என்று ஹெச்.ராஜாவும், அமைச்சர் ஜெயக்குமாரும் மோதிக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணியவாதியாக இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பதை நான் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறேன். இந்த விவாதத்திலிருந்தே சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றபடி ஜெயக்குமார் சார் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. பதில் சொல்லவும் விரும்பவில்லை!’’

‘‘அ.தி.மு.க-வில் குஷ்பு இணையவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் அமைச்சர் வேலுமணி ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றனவே?’’

‘‘எனக்கே இது புதிதாக இருக்கிறது. பா.ஜ.க-வில் நான் சேரவிருப்பதாகத்தான் இதுவரை செய்திகளைக் கிளப்பிவிட்டார்கள். எனவே, அது எனக்குப் பழகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க-வில் நான் சேரப்போவதாக எங்கிருந்துதான் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அமைச்சர் வேலுமணியை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட இல்லை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism