‘தேவேந்திர குல வேளாளர்களை, பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றிவிடுங்கள்’ என்ற குரல்கள், அண்மைக்கால தமிழக அரசியலில் அடிக்கடி கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிய வரவாக வந்து சேர்ந்திருக்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.

கடந்த வாரம் பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டு சென்னை திரும்பியவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘பட்டியல் இனத்திலிருந்து நீங்கள் வெளியேறத் துடிப்பது ஏன்?’’

‘‘1932-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயேகூட நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகும்கூட 1952-ம் ஆண்டு வரையில் நாங்கள் பி.சி பட்டியலில்தான் இருந்துவந்திருக்கிறோம். அதன் பிறகு நடைபெற்ற அரசியல் சூழ்ச்சிகளால் எங்களை எஸ்.சி பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். அரசாங்கத்தின் இந்தச் சதியைப் புரிந்துகொண்ட எனக்கு, அந்தச் சூழ்ச்சியைப் பற்றி மட்டும் விவரமாகச் சொல்லத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பட்டியல் இனத்திலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.’’

‘‘கடந்த காலங்களில் ‘பட்டியல் இனத் திலிருந்து வெளியேறும் கோரிக்கையை வைப்பதற்கு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்...’என்று விமர்சித்த நீங்களே, இப்போது அதே கோரிக்கையை முன்வைக்கிறீர்களே?’’

‘‘அப்படி நான் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ‘பட்டியல் இனத்தில் உள்ள வேளாண் தொழில் செய்துவரக்கூடிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து `தேவேந்திர குல வேளாளர்கள்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்; பட்டியல் இனத்திலிருந்தும் எங்களை வெளியேற்ற வேண்டும்’ என்றெல்லாம் கடந்த 40 ஆண்டுகளாக நாங்கள் சொல்லி வருகிறோம். டாக்டர் கிருஷ்ணசாமி யெல்லாம் இப்போது வந்திருப்பவர். அவரை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், அவர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்வதற்கே இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். எனவே, `அவர் எதன் அடிப்படையில் இப்படியொரு கோரிக்கையை வைத்திருக் கிறார் என எனக்குத் தெரியவில்லை’ என்றுதான் சொல்லியிருப்பேன். ஏனெனில், ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை ‘நாங்கள் தலித், தலித்’ என்றெல்லாம் பேசிவந்தவர் அவர். அப்படியிருக்கும்போது ‘பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும்’ என்ற கோரிக்கைக்கும் அவர் இதுவரை சொல்லிவந்ததற்கும் எப்படிப் பொருந்தும் என்றுதான் நான் கேட்டிருந்தேன்.’’

‘‘பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவது என்பது சாத்தியமில்லாதது என்றுகூட நீங்கள் முன்பு சொல்லி யிருக்கிறீர்களே?’’

‘`ஆமாம்... ‘சாத்தியமில்லாதது’ என்று நானே சொல்லியிருக்கிறேன். ஏனெனில், பட்டியலிலிருந்து குறிப்பிட்ட மக்களை வெளியேற்றுவது என்பது மத்திய அரசு செய்யக்கூடியது. நாடாளுமன்ற கமிட்டிக் கூட்டம் நடத்தி, ஓட்டெடுப்பு நடத்தி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அதன் பிறகுதான் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு, மத்திய அரசு பரிந்துரை செய்ய முடியும். ஆக, அதிகமான செயல் பாடுகளைக்கொண்ட காரணத்தால், இது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றுதான் சொல்லியிருந்தேன்.’’

‘‘பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவதால், இட ஒதுக்கீட்டு உரிமைகளை இழக்க வேண்டியதுவருமே?’’

‘‘இன்றைக்கு எல்லோருமே படிக்க ஆரம்பித்துவிட்டோம். எனவே அதைப் பற்றி கவலையில்லை. ஜனத் தொகையின் அடிப்படை யில் எங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொடுங் கள். அதுபோதும் என்கிறோம்.’’