Published:Updated:

“பாவம் செய்தது தி.மு.க; பழி சுமப்பது அ.தி.மு.க.வா?”

ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

‘`தமிழ்மொழி மிகவும் தொன்மையானதொரு மொழி.

“பாவம் செய்தது தி.மு.க; பழி சுமப்பது அ.தி.மு.க.வா?”

‘`தமிழ்மொழி மிகவும் தொன்மையானதொரு மொழி.

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு, டெண்டர் முறைகேடு, உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு எனத் தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்! இதற்கிடையில், கூட்டணி உரசல்கள், குடமுழுக்கு குடுமிப்பிடி சண்டைகள் எனத் தமிழக தர்பாரே ‘டர்’ராகிக் கிடக்கும் சூழலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைச் சந்தித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`தமிழ்நாட்டில், ‘தமிழில் வழிபாட்டு உரிமை வேண்டும்’ என்று கேட்பதே அவமானமாக இருக்கிறது என்கிறார்களே?’’

‘`தமிழ்மொழி மிகவும் தொன்மையானதொரு மொழி. உலகெங்கும் நடைபெற்ற போராட்டங்களில், மொழிக்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த வரலாறு என்பது தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு! அதனால்தான் மத்திய நிதி அமைச்சரில் ஆரம்பித்து பிரதமர் வரை அனைவருமே தமிழ்மொழியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். எனவே, தமிழ் மொழி எங்குமே தாழ்ந்துவிடவில்லை; தனித்தன்மையை இழந்துவிடவில்லை.

அதேசமயம் ஆன்மிகத்தைப் பொறுத்த வரையில், ஆகம விதிகள் என்றொரு வடிவம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இங்கே நூலகம், அங்கே உணவருந்தும் அறை, அதற்கடுத்து வரவேற்பறை என்பதுபோல், ஆகம விதிகள் சில வரையறைகளை வகுத்து வைத்திருக்கின்றன. இந்த விதிகளைத்தான் மரபுகளின் அடிப்படையில் தமிழக அரசும் பின்பற்றிவருகிறது. ஆகம விதிகள் எல்லாம் சரிதானா, உண்மையானவைதானா என்ற விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில், எனக்கு ஆகம விதிகளில் நம்பிக்கை உண்டு!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`ஆகம விதிகளில், ‘குறிப்பிட்ட மொழியில் மட்டுமேதான் கடவுள் வழிபாடு செய்யப்பட வேண்டும்’ என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார் சொல்கிறாரே?’’

‘`தமிழா, சம்ஸ்கிருதமா என்ற மொழிப் பாகுபாடுகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆன்மிகத்தைப் பொறுத்தவரையில் மக்களின் நம்பிக்கை உணர்வுகளுக்கு மட்டுமேதான் ஓர் அரசு மதிப்பளிக்க முடியும். உதாரணத்துக்குச் சொல்கிறேன்... மாரியம்மன் கோயிலில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுவது கிடையாது. ஆனாலும்கூட அந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் என்று வருகிறபோது, சம்ஸ்கிருதத்தில்தான் செய்யப்படுகிறது. இது அவரவர் நம்பிக்கை - உணர்வுகளின் பாற்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

‘கோத்திரம் என்ன, குலம் என்ன, நட்சத்திரம் என்ன’ என்றெல்லாம் நிறைய கோயில்களில் கேட்பார்கள். ஆனால், நான் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் என் கோத்திரம், குலம், நட்சத்திரம், பெயர் உட்பட எதையும் சொல்வதில்லை. ஏனெனில், எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை; கடவுள்மீது மட்டும்தான் நம்பிக்கை. ஆக, தனிப்பட்ட நம்பிக்கை - உணர்வுகளை யாரும் கேள்வி கேட்கமுடியாது. எனவே, இது தமிழா, சம்ஸ்கிருதமா என்ற மொழிப் பிரச்னை கிடையாது, மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னை!’’

‘` `தமிழ், சம்ஸ்கிருதம் என இருமொழிகளிலும் குடமுழுக்கு என்பது ஏமாற்றுவேலை’ என்கிறாரே பெ.மணியரசன்?’’

“சம்ஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்படுவதைச் சிலர் நம்புகிறார்கள், இன்னும் சிலர் உணர்வுபூர்வமாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியிருக்கும்போது நியாயத்தின் அடிப்படையில், அவர்களது நம்பிக்கையை நாம் மறுத்தால், அவர்கள் மன வருத்தமடைவார்கள். அந்த வருத்தத்துக்கு அரசே காரணமாக இருந்துவிடக் கூடாது அல்லவா? எனவே, மதச்சார்பற்ற ஓர் அரசாக, ஆகமவிதிகளின் வழியே சம்ஸ்கிருத மொழியில் கோயில் வழிபாடு - கும்பாபிஷேகங்களைத் தொன்றுதொட்டுச் செய்துவருகிறோம். அதேசமயம், ‘தமிழ்மொழியிலும் குடமுழுக்கு செய்யவேண்டும்’ என்ற கோரிக்கை இப்போது சிலரிடமிருந்து வருகிறபோது, ‘தாராளமாகச் செய்யலாம்’ என்ற பரந்த மனப்பான்மையோடு அவர்களது கோரிக்கையையும் ஏற்று இரு மொழிகளில் குடமுழுக்கு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது?’’

‘`பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சை அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் கண்டிக்கும்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் ரஜினியின் பேச்சை வரவேற்கிறாரே..?’’

‘`அன்றைய தினம் ரஜினிகாந்த் பேசிய பேச்சு என்பது எதார்த்தமான ஒன்றுதான். அது இவ்வளவு பெரிய விவாதங்களை உருவாக்கும் என்றுகூட அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால், இதுகுறித்துப் பத்திரிகையாளர்கள் எங்களிடம் கருத்து கேட்கும்போது அவரவர் தனிப்பட்ட அனுபவம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில், எங்களது சொந்தக் கருத்துகளைச் சொல்கிறோமே தவிர கட்சியின் கருத்தாக யாரும் எதையும் சொல்லவில்லை.’’

‘`அமைச்சர் பாஸ்கரன், ‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்துசெல்லக் காத்திருக்கிறோம்’ என்கிறார். ‘கூட்டணி தர்மத்துக்காகப் பொறுத்திருக்கிறோம்’ என்கிறார் பொன்னார். என்னதான் பிரச்னை?’’

‘`அமைச்சர் பாஸ்கரன் அந்தக் கருத்தைப் பேசிய இடம் இளையான்குடி! குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய பேச்சின்போதுதான் இந்த விவாதமே வருகிறது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு அ.தி.மு.க., ‘ஆதரவு தெரிவித்ததா இல்லையா, அல்லது, ஆதரவு தெரிவித்துவிட்டுப் பின்வாங்கிவிட்டதா’ என்பது மாதிரியாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இதை எடுத்துச்சொல்லும்போது, ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வராது. அப்படி ஒருவேளை வரும் என்று சொன்னால், நாங்கள் அந்தச் சட்டத்திலிருந்து விலகித்தான் நிற்போம்; உங்களோடு இணைந்து நிற்போம்’ என்று சொல்லவந்ததைத்தான் அமைச்சர் பாஸ்கரன் அவரது பாணியில் அன்றைக்குப் பேசியிருக்கிறார். ஆனால், அது தவறாக வந்துவிட்டது என்பதை அறிந்ததும் அவரே உடனடியாக, தான் பேசிய பேச்சுக்கு மறுப்பும் தெரிவித்துவிட்டாரே!’’

‘`அமைச்சர் பாஸ்கரன் பேச்சைக் குறிப்பிட்டு, ‘ஹலோ ராஜ்பவனா?’ என்று கேட்டு நடிகர் எஸ்.வி.சேகர் ட்வீட் வெளியிட்டிருப்பது ‘பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு அ.தி.மு.க அரசு அடிமையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது’தானே?’’

‘`காவிரிப் பிரச்னையில், 22 நாள்களாக நாடாளுமன்றத்தையே முடக்கியவர்கள் அ.தி.மு.க எம்.பி-க்கள். மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தின் கட்டமைப்புப் பணிகளில் வளர்ச்சிபெற்றிருக்கிறோம். சிறந்த மாநிலம் என்ற அந்தஸ்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. தமிழகத்துக்குள் வரும்போது வேட்டி சட்டை அணிவதில் ஆரம்பித்து, உலக அரங்கில் தமிழ்மொழியைப் புகழ்ந்து பேசுவது வரையிலாக பிரதமரே தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றுகிறார். இப்படியொரு சூழலை உருவாக்கியதே அ.தி.மு.க அரசுதானே!

இதற்கு முன்பு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசோடு கூட்டணியில் இருந்த தி.மு.க-வினர் இப்படியொரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருந்தார்களா... கையாலாகாமல்தானே இருந்தார்கள்? ஆக, அவர்கள்தான் அடிமையாக இருந்தார்களே தவிர, அ.தி.மு.க அரசு ஒருநாளும் அடிமையாக இருக்கவில்லை!’’

``ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்துக்கேட்போ தேவையில்லை - என்ற மத்திய அரசின் அறிவிப்பை தி.மு.க எதிர்க்கிறது. ஆனால், ‘ஸ்டாலின் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்’ என்கிறார் அ.தி.மு.க அமைச்சர். இதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

‘`ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் ஆலை இப்படி எதுவாக இருந்தாலும் மக்களை பாதிக்கக்கூடியதாக இருந்தால், அதை அ.தி.மு.க அரசு செயல்படுத்தாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இதைச் சட்டமன்றத்திலேயே முதல்வர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கும்... அது தனி.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்ததே தி.மு.க-வினர்தான். அவர்கள் ஆட்சியில் இதைக் கொண்டுவந்தபோது அவர்கள் இத்திட்டத்தை எப்படிக் கையாண்டார்கள்... இப்போது மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்?

இதுபற்றிக் கேட்டால், ‘மக்களுக்கு பாதிப்பு’ என்கிறார்கள். ‘ஸ்டெர்லைட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்’ என்று கேட்டாலும் ‘மக்களுக்கு பாதிப்பு’ என்கிறார்கள். மீத்தேனுக்கும் இதே பதில்தான். அப்படியென்றால், ‘மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று தெரிந்திருந்தும் இந்தத் திட்டங்களுக்கெல்லாம் ஏன் தி.மு.க ஆட்சியில் அனுமதி கொடுத்தீர்கள்? ஆக, பாவம் செய்ததெல்லாம் தி.மு.க., பழியைச் சுமப்பது மட்டும் அ.தி.மு.கவா?’’

‘`டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில், ‘மீன் குஞ்சுகளைப் பிடித்துவிட்டு, திமிங்கிலங்களைத் தப்பிக்க வைக்கிறார்கள்’ என்ற எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு குறித்து..?’’

“இப்படியொரு மோசடி, தமிழ்நாட்டில் நடந்திருக்கக்கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், இந்த முறைகேடு குறித்து உரிய முறையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணையில் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘இப்படியொரு மோசடி எப்படி நடந்தது, இனிமேல் இதுபோன்று ஒரு முறைகேடு நடக்கக்கூடாது’ என்ற நோக்கில்தான், விசாரணையை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ‘இந்த முறைகேடு உள்நோக்கத்தோடு நடந்திருக்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் களங்கம் கற்பிக்க முயற்சி செய்கின்றன. மற்றபடி, நடந்துமுடிந்த தவற்றை நான் நியாயப்படுத்தவில்லை!’’

‘`சசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது என்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சசிகலாவின் தீவிர விசுவாசியான நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’’

‘`நான் தீவிர விசுவாசி என்று உங்களிடம் யார் சொன்னார்கள்?’’

‘` ‘சின்னம்மா, தமிழக முதல்வராக வரவேண்டும்’ என்று தாங்களே கடந்த காலத்தில் கூறியிருக்கிறீர்களே?’’

‘`நாடேதான் அப்படிச் சொல்லியது!’’

‘`முதன்முதலில் இப்படியொரு கோரிக்கையை எழுப்பியது தாங்கள்தானே?’’

‘`நோ கமென்ட்ஸ்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism