Published:Updated:

``பயனாளிகளைத்தான் முதலில் குறி வைக்கிறோம்!'' - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வியூகம்

எல்.முருகன் ( பா.காளிமுத்து )

தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எல்.முருகன், ``சி.ஏ.ஏ விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக இருக்கிறது. எனவே, சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பா.ஜ.க பின்வாங்கப்போவதில்லை'' என்கிறார் உறுதியான குரலில்.

``பயனாளிகளைத்தான் முதலில் குறி வைக்கிறோம்!'' - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வியூகம்

தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எல்.முருகன், ``சி.ஏ.ஏ விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக இருக்கிறது. எனவே, சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பா.ஜ.க பின்வாங்கப்போவதில்லை'' என்கிறார் உறுதியான குரலில்.

Published:Updated:
எல்.முருகன் ( பா.காளிமுத்து )

தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் முயற்சியில் சற்றும் மனம் தளராது, அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்துவருகிறது மத்திய பா.ஜ.க தலைமை. சமீபத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகனை தமிழக பா.ஜ.க தலைவராக்கி, திராவிட கட்சிகளுக்கு `செக்‘ வைத்திருக்கிறது.

புதிய தலைவர் எல்.முருகனை கமலாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லிப் பேசினோம்...

``தமிழக பா.ஜ.க தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டதில், கட்சிக்குள்ளேயே சில தலைவர்கள் அதிருப்தியடைந்திருப்பதாக செய்திகள் வெளியானதே?’’

``எங்கள் கட்சியில், அப்படியான அதிருப்திகள் யாருக்குமே கிடையாது. பா.ஜ.க-வின் அகில இந்திய தலைமை என் பெயரை அறிவித்த உடனேயே, தமிழகத்தைச் சேர்ந்த எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தி ஊக்கப்படுத்தினர். சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கியபோதும்கூட மூத்த தலைவர்கள் வந்திருந்து வரவேற்றனர். இப்போதும், எல்லாத் தலைவர்களோடும் கலந்து ஆலோசித்தே செயல்பட்டுவருகிறேன். எனவே, அதிருப்தி என்பதற்கு இங்கே எள்ளவும் இடமில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தலைவராக, கட்சியை மேம்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’’

``ஏற்கெனவே பெரிய பெரிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். பிரதமரின் ஆவாஸ் யோஜனா, பயிர்க்காப்பீடு, முத்ரா லோன் என மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களில் அதிக அளவில் பயன்பெற்றிருக்கும் பயனாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மாவட்டம்தோறும் ஒன்றரை லட்சத்திலிருந்து 3 லட்சம் வரையிலான மக்கள், ஏதாவதொரு திட்டத்தினால் பயனடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, முதற்கட்டமாக இந்தப் பயனாளிகளை நோக்கி கட்சியை முன்னெடுத்துப்போகும் பணிகளைச் செய்துவருகிறோம். அடுத்து, தமிழ்நாடு முழுக்கவே ஒவ்வொரு பூத்துக்கும் 10 பேர் கொண்ட கமிட்டியை அமைக்கும் பணியை நிறைவாகச் செய்திருக்கிறோம். நகர்மன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து வரவிருக்கிறது. அதையெல்லாம் மனத்தில் வைத்து, கட்சியின் அமைப்பு ரீதியிலான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளோம்.’’

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

``பா.ஜ.க-வில் யாரும் சாதி பாகுபாடு பார்ப்பதில்லை என்கிறார்கள். ஆனால், நாட்டின் முதல் குடிமகனே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலைதானே இன்றும் தொடர்கிறது?’’

``அது தவறான தகவல். அப்படியொரு சம்பவம் எங்கேயும் நடைபெறவில்லை. எங்களைக் குறிவைத்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பிய விஷமப் பிரசாரம் அது. கட்சியில் - இயக்கத்தில் நாங்கள் பல வருடங்களாகப் பழகியிருந்தாலும், `யார் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்’ என்பதுகூட எங்களில் யாருக்கும் தெரியாது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முரசொலி பஞ்சமி நில விவகாரம் பற்றி விசாரணைசெய்த அதிகாரி நீங்கள்... என்ன ஆயிற்று அந்த விவகாரம்..?’’

``முரசொலி விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதுகுறித்துப் பேசமுடியாது.’’

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பத்திரிகையாளர் என்.ராம், `சி.ஏ.ஏ-வின் ஆபத்து குறித்து ரஜினிகாந்த்துக்குத் தெரியவில்லை’ என்கிறாரே?’’

``இந்தச் சட்டத் திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பில்லை; சி.ஏ.ஏ-வின் தேவை ஏன் என்பது குறித்தெல்லாம் நாடு முழுக்கவே பேரணி நடத்தி மக்களுக்கு எடுத்துச்சொல்கிறோம். எனவே, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, சி.ஏ.ஏ விவகாரத்தில் தெளிவாக இருக்கிறது. அதனால்தான், `சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை’ என்று நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்துவிட்டோம்’’

``பாபர் மசூதி இடிப்பு வழக்கில், `ராமர் கோயில் கட்டலாம்’ எனத் தீர்ப்பு வழங்கியதற்குப் பரிசாகவே ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி பதவியை வழங்கியிருக்கிறது பா.ஜ.க என்கிறார்களே?’’

``அப்படி எதுவும் இல்லை. நீதிமன்றத் தலைமைப் பணியில் அவர் இருக்கும்போது கொடுக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளில் அதுவும் ஒன்று. ஒரு நீதிபதியாக, `எது நியாயம்’ என்று அவருக்குத் தோன்றுகிறதோ அப்படித் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்... அவ்வளவுதான். நீதிமன்றம் என்பதே தனிப்பட்ட சுயாதிகார அமைப்பு என்கிறபோது, அதைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பவே முடியாது. எனவே, கடந்த காலங்களில், அவர் ஆற்றிய சேவை, பணி அனுபவம் உள்ளிட்ட தகுதிகளைக் கருத்தில்கொண்டுதான் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.’’

ரஞ்சன்  கோகாய்
ரஞ்சன் கோகாய்

(தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் இந்த சுவாரஸ்ய பேட்டியின் தொடர்ச்சியை நாளை வெளியாகும் ஆனந்த விகடனில் படிக்கலாம்... அதில்,

தமிழக பா.ஜ.க தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

சாதி அடையாளம்தான் உங்களுக்கான தகுதியா?

தமிழ்நாட்டில், தாமரையை எப்படி மலரவைக்கப்போகிறீர்கள்?

- என்பது உள்ளிட்ட விறுவிறு கேள்விகளுக்கு பரபர பதில் அளித்திருக்கிறார்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism