Published:Updated:

‘‘வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்!’’ - கதிர் ‘ஆனந்தம்’

 கதிர் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றார்.

வேலூர் எம்.பி-யாக அடுத்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றப்போகும் கதிர் ஆனந்திடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘முதன்முறையாக நேரடி அரசியலுக்குள் வந்திருக்கும் உங்களுக்கு, இந்தத் தேர்தல் புதிய அனுபவமாக இருந்ததா?’’

‘‘உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்கள் எனக்குப் புதிதல்ல. ஐந்தாறு தேர்தல்களில், அப்பாவோடு களப்பணி செய்திருக்கிறேன்; கட்சியினருடன் பழகியிருக்கிறேன். மக்களோடு மக்களாக இருந்துவருகிறேன். மீடியா முன் வந்ததில்லையே தவிர, மக்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். அப்பாவின் பின்புலத்தில் இருந்ததால்,வெளிவட்டாரத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வில்லை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதிர் ஆனந்துக்காக தேர்தல் பரப்புரை செய்யும் ஸ்டாலின்
கதிர் ஆனந்துக்காக தேர்தல் பரப்புரை செய்யும் ஸ்டாலின்

‘‘ஓட்டு எண்ணிக்கையில் நான்கைந்து சுற்றுகள் வரை ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அந்த நேரத்தில் உங்களின் மன ஓட்டம் எப்படி இருந்தது?’’

‘‘தி.மு.க-தான் வெற்றிபெறப்போகிறது என்று நான் தெளிவாக இருந்தேன். வேட்புமனு தாக்கல் செய்தபோதே, வெற்றி எனக்குத்தான் என முடிவுசெய்து விட்டேன்.’’

‘`பிரசாரத்தின்போது ‘தேர்தலுக்காக என் மகனை லாரி ஏற்றிக் கொல்லப்பார்த்தார்கள். என் வீட்டு வேலைக்காரனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது யார், வருமானவரித் துறை சோதனைக்குக் காரணமான துரோகி யார் என்று எனக்குத் தெரியும்’ என்று உங்கள் தந்தை கூறி வருத்தப்பட்டார். அந்தச் சதிச்செயல்களுக்குக் காரணமானவர்கள் யார்?’’

‘‘இதை அப்பாவிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். எனக்கே அவர் சொல்லித்தான் தெரியும். ஆபத்தை விளைவிக்கும் நபர்கள்குறித்து தெரிவித்தால், நான் பயந்து விடுவேனோ என்று அவர் மறைத்திருக்கிறார். இந்த உண்மையையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தேர்தல் பணிகளைச் செய்தார்.

தண்டவாளத்திலேயே தலை வைத்துப் படுத்தவர் கலைஞர். உருட்டல் மிரட்டல் என உயிருக்குப் பயந்தவர்கள் தி.மு.க-வினர் கிடையாது. மக்களுக்காக எங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம்.’’

‘‘வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்!’’ - கதிர் ‘ஆனந்தம்’

‘‘உங்கள் தந்தை அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு அழுவதற்கான காரணம் என்ன?’’

‘‘அது அழுகையல்ல... உணர்ச்சியின் வெளிப்பாடு! நான் வெற்றிபெற்று வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா ஆரத்தியெடுத்து என்னைக் கட்டிப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டார். சந்தோஷத்திலும் கண்ணீர் வரும்... துக்கத்திலும் கண்ணீர் வரும். இந்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும், தந்தையின் மனவலிமையையும் கொள்கைப் பிடிப்பையும்தான் நான் பார்க்கிறேன்.’’

‘‘உங்களுக்கு தந்தை கற்றுக்கொடுத்தது என்ன?’’

‘‘நான் பிறந்ததிலிருந்தே அப்பாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஸ்கூலுக்குச் சென்று வீடு திரும்பும் வரை நான் என்ன வெல்லாம் பார்த்தேன், யாரிடமெல்லாம் பேசினேன் என அனைத்தையும் ஒளிவுமறை வில்லாமல் அப்பா, அம்மாவிடம் ஒப்பித்து விடுவேன். எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததேயில்லை. `எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தன்மானத்தை இழக்கக் கூடாது’ என்று தந்தை கற்றுக்கொடுத்திருக் கிறார். அரசியல்ரீதியாகவும் சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ‘வாக்களித்த மக்கள் எந்நேரம் உன் வீட்டு கதவைத் தட்டினாலும், கதவைத் திறக்க வேண்டும்.

என்ன வாக்குறுதி கொடுத்திருக்கி றாயோ, அதைவிட ஒரு படி மேலேதான் மக்களுக்குச் செய்யவேண்டும். மக்களின் தேவை, பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஓடிப்போய் நிற்க வேண்டும்’ என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். தந்தையின் சொல்லை நிச்சயம் நிறைவேற்றுவேன்.’’

‘‘தி.மு.க-வில் இளைஞரணிச் செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் உங்களுக்கும் பதவி வழங்கப்படுமா?’’

‘‘கட்சியில் பொறுப்பு என்பது, மரியாதை நிமித்தமாகக் கொடுப்பதல்ல. கட்சியில் உழைப்பதற் காகக் கொடுக்கப்படுவது. ‘மாபெரும் கடமையாகப் பார்ப்பதாக’ உதயநிதியே சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி, ஒருகாலகட்டத்தில் எனக்கும் பொறுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்.’’

‘‘வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்!’’ - கதிர் ‘ஆனந்தம்’

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் உங்களிடம் என்ன சொன்னார்?’’

‘‘பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் புறப்பட்டபோது, கார் கண்ணாடியை இறக்கி விட்டு என் கையில் வைரமுத்து எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்து ‘தேர்தல் முடிந்த பிறகு திறந்து பார்’ என்றார். வெற்றிபெற்ற பிறகு புத்தகத்தைத் திறந்து பார்த்தேன். அதில், ‘வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று முன்கூட்டியே கணித்து எழுதியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.’’

‘‘வேலூர் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக் காக, தாயுள்ளதோடு பணியாற்றுவேன். மக்கள்நலத் திட்டங்களுக்காக நாடாளுமன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.

வேலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை விரைவாகச் செயல் படுத்துவேன். தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க, கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்வேன். வேலைவாய்ப்புகளை உருவாக்க, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பேன். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்துக்கான உரிமையை, மத்திய அரசிடம் போராடிப் பெறுவேன். தி.மு.க-வின் அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ என்றார் ஆனந்தமாக.