Published:Updated:

``நீங்கள் அதிகாரபோதையில் இருக்கிறீர்கள்!" - கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்

அன்னா ஹசாரே

``நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்களது அரசின் மதுபானக் கொள்கையால் மிகவும் வேதனையடைந்து முதன்முறையாக உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்." - அன்னா ஹசாரே

``நீங்கள் அதிகாரபோதையில் இருக்கிறீர்கள்!" - கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்

``நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்களது அரசின் மதுபானக் கொள்கையால் மிகவும் வேதனையடைந்து முதன்முறையாக உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்." - அன்னா ஹசாரே

Published:Updated:
அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக புதிய லோக் பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்று கோரி 2011 தொடக்கத்தில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இப்போது மத்திய அரசின் பாதுகாப்போடு தனது சொந்த ஊரில் அமைதி காத்து வருகிறார். அன்னா ஹசாரேயுடன் அரவிந்த் கெஜ்ரிவாலும் சேர்ந்துதான் போராட்டம் நடத்தினார். தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ``நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள். மதுவை போன்று அதிகாரமும் போதை தரக்கூடியது.

அரவிந்த கெஜ்ரிவால்
அரவிந்த கெஜ்ரிவால்

நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்களது அரசின் மதுபானக் கொள்கையால் மிகவும் வேதனையடைந்து முதன்முறையாக உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். குடியிருப்புவாசிகளின் ஒப்புதல் இல்லாமல் மதுபானக்கடைகள் திறக்கப்படாது என்று சொல்லிவிட்டு முதல்வரானதும் அதனை மறந்துவிட்டீர்கள். நீங்களும், மணீஷ் சிசோடியாவும் மற்றவர்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் எந்த வித வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி அரசின் தவறான மதுபானக்கொள்கை போன்று நாட்டில் வேறு எங்கும் உருவாக்கப்படவில்லை.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

வலுவான லோக்பால் மசோதா, ஊழல் எதிர்ப்பு சட்டங்களை கொண்டு வருவதற்கு பதில் மக்களுக்கு எதிரான... குறிப்பாக பெண்களுக்கு எதிரான மதுபானக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறீர்கள். எனது கிராமமான ராலேகன் சித்தி மற்றும் மகாராஷ்டிரா மதுபானக் கொள்கை மிகவும் சிறந்தது. டெல்லியில் அனைத்து பகுதியிலும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதிகாரத்திற்குப் பணம், பணத்திற்கு அதிகாரம் என்ற வட்டத்தில் மக்கள் சிக்கி இருப்பது போன்று தெரிகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.