Published:Updated:

ரூ.500 கோடி... ஐ.டி ரெய்டு பின்னணி; எடப்பாடியை கட்டம் கட்டுகிறதா பாஜக?!

எடப்பாடி பழனிசாமி - மோடி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட செய்யாதுரை மற்றும் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்துள்ளது. இதில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ரூ.500 கோடி... ஐ.டி ரெய்டு பின்னணி; எடப்பாடியை கட்டம் கட்டுகிறதா பாஜக?!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட செய்யாதுரை மற்றும் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்துள்ளது. இதில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - மோடி

அ.தி.மு.க உட்கட்சிப்பூசலால் எம்.ஜி.ஆர் மாளிகையும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபமும் அதிர்ந்துகொண்டிருந்த சமயம், மறுபக்கம் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறைச் சோதனை அனல் அடித்தது. இதற்குமுன் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் ஓரிரு நாளில் முடிந்த நிலையில், இந்த முறை நடந்த சோதனை ஐந்து நாள்களைக் கடந்து சென்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும் ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் ஜூன் 6ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையைத் தொடங்கினார்கள். அதையடுத்து எஸ்.பி.கே என்ற கட்டுமான நிறுவனத்தின் தலைவரும் அரசு ஒப்பந்ததாரருமான செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுரை, அருப்புக்கோட்டை, சென்னை ஆகிய பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான்கு நாள்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

வருமானவரித்துறை ரெய்டு
வருமானவரித்துறை ரெய்டு

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாதுரைக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அறைக்குள் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர். பின்னர் அந்த அறையைத் திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். அதில் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்ற பேச்சு அடிபட, அது தொடர்பான விசாரணையில் இறங்கினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த ரெய்டுகள் நடந்தன. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரெய்டு நடந்த சூழலை வைத்துக்கொண்டு இதற்கு அரசியல் சாயம் பூசப் பார்க்கிறார்கள். தொடர் ரெய்டுகளால் எல்லோரும் டாக்குமென்டுகளைப் பாதுகாப்பான இடங்களில் பதுக்கிவிட்டார்கள் போல. அதனால், நாங்கள் ரெய்டு சென்ற எந்த இடத்திலும் எதுவும் சிக்கவில்லை. இது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் ரெய்டு சில நாள்களுக்குத் தொடர வேண்டியதாகப் போய்விட்டது. அப்படிச் செய்ததும் ஒரு வகையில் நல்லதாகவே முடிந்தது. இப்போது சுமார் 500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது. இதில் எந்த உள்நோக்கமோ அரசியல் நோக்கமோ இல்லை” என்கின்றனர் வருமான வரித்துறை அலுவலக தரப்பில் . ஆனால், அ.தி.மு.க தரப்பில் விசாரித்தால், “ஓ.பன்னீர்செல்வத்துக்காகத்தான் இந்த ரெய்டே நடந்தது. முக்கிய பத்திரிகையின் ஆசிரியர் ஒருவருடன் இணைந்து இதை அரங்கேற்றியிருக்கிறார். அதற்குத் தமிழ்நாட்டின் ஆளும் தரப்பும் உடந்தை. ஆனால், இதைக் கண்டெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை.” என்கிறார் திடமாக.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
ட்விட்டர்

“ரெய்டில் 500 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அதற்குரிய தொகையைச் செலுத்திவிட்டால் இந்த வழக்கில் அதற்குமேல் எதுவும் செய்வதற்கில்லை. இதுதான் அலுவலக நடைமுறையும் கூட” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஊழல் செய்தவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். அது நடக்கும் என நம்புவோம்.