Published:Updated:

காங்கிரஸ் தலைவர் ரேஸில் ப.சிதம்பரம்?! - பின்னணி என்ன?

ப.சிதம்பரம்

``காங்கிரஸ் தலைவராக ஒரு வேளை ராகுல் காந்தியே வரலாம். அல்லது ராகுல் காந்தி அல்லாதவர் ஒருவர் வரலாம்” - ப.சிதம்பரம்

காங்கிரஸ் தலைவர் ரேஸில் ப.சிதம்பரம்?! - பின்னணி என்ன?

``காங்கிரஸ் தலைவராக ஒரு வேளை ராகுல் காந்தியே வரலாம். அல்லது ராகுல் காந்தி அல்லாதவர் ஒருவர் வரலாம்” - ப.சிதம்பரம்

Published:Updated:
ப.சிதம்பரம்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த விவாதங்கள் கவனம் பெற தொடங்கி இருக்கிறது. வரும் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். போட்டி ஏற்படும் நிலையில் அக்டோபர் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 9,000 நிர்வாகிகள் வாக்களிக்கவுள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இதற்கிடையே, `காங்கிரஸ் கட்சியின் தலைவராக ப.சிதம்பரம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தகவல் வெளியாகிறது. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?’ என்று சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபர் கேட்ட கேள்விக்கு, ``இதெல்லாம் பேசப்படுகிறது... கூறப்படுகிறது... சொல்லப்படுகிறது... என்னை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் 9,000 வாக்காளர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்தான் கட்சி தலைவராக வர முடியும். ஒரு வேளை ராகுல் காந்தியே வரலாம். அல்லது ராகுல் காந்தி அல்லாதவர் ஒருவர் வரலாம். அந்த கட்சித் தலைமைக்கு கடுமையாக ஒத்துழைத்து பணியாற்றி இட்ட வேலைகள் செய்வேன். என்னுடைய வயது அனுபவத்திற்கு இணையான பொறுப்பு தந்தால் நிச்சயமாக செய்வேன். ஆனால், கட்சி தலைவருக்கெல்லாம் ஆசைப்படுவது கிடையாது” என்று பதிலளித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏற்கனவே நேரு குடும்பத்தை தாண்டி அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், மீரா குமார், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரின் பெயர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளன என்று செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் சில தலைவர்கள் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ‘ராகுல் காந்தி அல்லாதவர் ஒருவர் வரலாம்’ என்று ப.சிதம்பரம் இப்போது கூறியிருப்பது மீண்டும் காங்கிரஸ் தலைமை குறித்து விவாதம் தொடங்கியிருக்கிறது.

கோபண்ணா
கோபண்ணா

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, ``அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைகிறது. பத்து அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், பரிந்துறை செய்தால், முன்மொழிந்தால் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. யார் போட்டியிடுவார்கள் என்பது 30-ஆம் தேதிக்கு பிறகுதான் தெரியும். நிச்சயம் தேர்தல் நடக்கும் புதிய தலைவர் வருவார். அது வெளிப்படையாக இருக்கும். அதில் யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். ஆனால், ப.சிதம்பரம் நிற்பது பற்றி ஏதும் தெரியாது” என்றார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

“இப்போது வரை தலைமைக்கு வர வேண்டும் என்று மனதளவில் ப.சிதம்பரம் தயாராகவில்லை. இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தலைவராக வருவதையே சாலச்சிறந்ததாக நினைக்கிறார்கள். ஒருவேளை அவர் வரவில்லையென்றால், யாரை அவர் கைகாட்டுகிறாரோ அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.” என்கிறார்கள் ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரதியுத் போர்டோலாய், அப்துல் காலிக் ஆகியோர் கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு கடந்த 6-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ``காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமாக சென்று அந்தந்த மாநிலங்களின் வாக்காளர்களை, வேட்பாளர்களால் அறிந்து கொள்ள முடியாது. கட்சித் தலைவர் தேர்தலை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 மதுசூதன் மிஸ்திரி
மதுசூதன் மிஸ்திரி

இதுகுறித்து மதுசூதன் மிஸ்திரி, ``காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை பொது அரங்கில் வெளியிட முடியாது. அது கட்சி விதிகளுக்கு எதிரானது. எனினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும். கட்சி தலைவர் தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படும்" என்று கூறியிருக்கிறார்.

ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய குலாம் நபி ஆசாத் உட்பட பல்வேறு தலைவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.