Published:Updated:

`புதிய கம்பெனிகள்; வாரிசுகளுக்காக மீறப்பட்ட விதிகள்!'- வீட்டுவசதி வில்லங்கத்தில் சிக்கிய ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ்

`தந்தை அமைச்சராக இருக்கும் குழுமத்திடம் மகன்கள் - அதில் ஒருவர் எம்.பி. விண்ணப்பத்தில் அவருடைய முகவரி தந்தைக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தின் முகவரி. சாதகமான உத்தரவு பெற முயல்வதும், அனுமதி பெறுவதும் லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம்’ - ஸ்டாலின்

`புதிய கம்பெனிகள்; வாரிசுகளுக்காக மீறப்பட்ட விதிகள்!'- வீட்டுவசதி வில்லங்கத்தில் சிக்கிய ஓ.பி.எஸ்?

`தந்தை அமைச்சராக இருக்கும் குழுமத்திடம் மகன்கள் - அதில் ஒருவர் எம்.பி. விண்ணப்பத்தில் அவருடைய முகவரி தந்தைக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தின் முகவரி. சாதகமான உத்தரவு பெற முயல்வதும், அனுமதி பெறுவதும் லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம்’ - ஸ்டாலின்

Published:Updated:
ஓ.பி.எஸ்

இந்தியாவில் கொரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் பணிகள் தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரை முடங்கிக் கிடக்கின்றன. அரசியல், ஆன்மிகம், விளையாட்டு என அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. உலகம் முழுவதும் கொரோனா குறித்த பேச்சு மட்டுமே இருந்த நிலையில், தனது குடும்பம் சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சாதகமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

கோயம்பேடு மார்க்கெட், தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மார்க்கெட் மூலம் கொரோனா பெரிய அளவில் பரவியுள்ளதைக் கடந்த சில நாள்களாகப் பார்த்து வருகிறோம். ஆனால், கோயம்பேடு மார்க்கெட், ஹாட்ஸ்பாட்டாக அறியப்படும் முன் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி அங்கு விசிட் அடித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அப்போது அவர் `TN 05 CE 2345’ என்னும் பதிவு எண் கொண்ட ரேஞ்ச் ரோவர் காரில்தான் கோயம்பேடு வந்து சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கார், துணை முதல்வர் எப்போதும் பயன்படுத்தும் வாகனம் கிடையாது. அரசு சார்பில் அவருக்கு இனோவா கார் வழங்கப்பட்டது. ஆனால், அவர் கோயம்பேடுக்கு அந்தக் காரில் வரவில்லை. அவர் வந்த ரேஞ்ச் ரோவர் கார், `Vijayanth Developers Private Ltd’ என்னும் ரியல் எஸ்டேட்டுக்குச் சொந்தமான கார். அதாவது, துணை முதல்வரின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகிய மூவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். தன் வாரிசுகள் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்தின் காரை துணை முதல்வர் பயன்படுத்துவது தவறு கிடையாது என்றாலும், அது அவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிக்காட்டுவதாக உள்ளது.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்
Representational image

அதேசமயம், 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம், விண்ணப்பித்திருந்த ரியல் எஸ்டேட் திட்டத்துக்கு தற்போது ஒப்புதல் கிடைத்த விஷயம் வெளியே வந்திருக்கிறது. திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள ராக்கியாபாளையத்தில் வீட்டு வசதி குடியிருப்புகளை உருவாக்கும் பொருட்டு 76 பிளாட்டுகளும் 41 வருவாய் குறைந்தோருக்கான பிளாட்டுகளும் கட்ட விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கான அனுமதி 2020-ம் வருடம் ஜனவரி 20 அன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் `தி வீக்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை மாநகருக்கு வெளியே இதுபோன்ற கட்டுமானங்களுக்கு டிடிசிபி (DTCP) தான் அப்ரூவல் வழங்கும். இது வீட்டு வசதித்துறையின்கீழ் வருகிறது. அதாவது தான் அமைச்சராக இருக்கும் துறை மூலமாக தன் வாரிசுகள் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதியை வழங்கியது, பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுவதற்கு சமம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓ.பி.எஸ் மகள் கவிதா பானு மற்றும் மகன் ஜெயபிரதீப் ஆகியோர் வெவ்வேறு முகவரிகளைக் கொடுத்துள்ள நிலையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ஆர் சென்னை ஆர்.ஏ புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு முகவரியைக் குறிப்பிட்டுள்ளார். இது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ வீடாக உள்ளது. அங்கு வசித்தாலுமே, அந்த முகவரியை தொழிலுக்காகப் பயன்படுத்தக் கூடாது. தனது எம்.பி பதவிக்கான வேட்புமனுவில் ஓ.பி.ஆர் அரசு ஒதுக்கும் வீடுகளில் தான் தங்கியதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் துணை முதல்வரின் அதிகாரபூர்வ வீட்டின் முகவரியை அவரின் மகன் பயன்படுத்துவது பல்வேறு கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.

முன்னதாக துணைமுதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் மகன்கள், மனைவி, மகள் ஆகியோர் வருமானந்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட தனித்தனி வழக்குகள் இங்கே மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில், விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியும் உள்ளது. ஆனால், இக்கம்பெனியில் அவர்கள் பெரிதாக எந்தப் பணப்பரிவர்த்தனைகளையும் பணிகளையும் செய்யவில்லை. மாறாக, விஜயந்த் டெவலப்பர்ஸ் கம்பெனியை முன்னிலைப்படுத்தி, சமீபமாக 2020 மார்ச் 19 அன்று, விஜயந்த் காஸ்மிக் பவர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற புதிய கம்பெனியையும் தொடங்கியுள்ளனர். கூடவே, வில்லோ நெட் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியும் முளைத்துள்ளது.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

சர்ச்சைகளும், வழக்குகளும் தொடரவே, பங்குதாரர்களாக இருந்த பழைய கம்பெனிகளைக் கைகழுவி விட்டு, விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியையும், அதை ஆதாரமாக வைத்து உப கம்பெனிகளையும் உருவாக்கக் காரணம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஓ.பி.எஸ்ஸின் ரத்த உறவுகள் சிலர் இருப்பதே என்கிறார்கள். அவர்களின் கைகளில் கம்பெனிகளை ஒப்படைத்துவிட்டு, மேற்பார்வை மட்டும் செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், `துணைமுதல்வரின் அதிகாரத்துக்குகீழ் இயங்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம், இரு மகன்களும் இயக்குநராக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம், புதிய புராஜக்ட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து, அனுமதி பெறுவது என்பது அப்பட்டமான அதிகார அத்துமீறல். ஊழல் வழக்குக்கான அடிப்படை ஆதாரம்' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

`புதிய கம்பெனிகள்; வாரிசுகளுக்காக மீறப்பட்ட விதிகள்!'- வீட்டுவசதி வில்லங்கத்தில் சிக்கிய ஓ.பி.எஸ்?

தொடர்ந்து அவர், `துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் இயக்குநர்களாக இருக்கும் `விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், தங்களது புராஜக்ட்டுகளைப் பதிவு செய்துகொள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜனவரி 20 அன்று விண்ணப்பித்திருக்கிறது.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமானது, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்குகிறது. தந்தை அமைச்சராக இருக்கும் குழுமத்திடம் மகன்கள் - அதில் ஒருவர் எம்.பி. விண்ணப்பத்தில் அவருடைய முகவரி, தந்தைக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தின் முகவரி. சாதகமான உத்தரவு பெற முயல்வதும் அனுமதி பெறுவதும் லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம். அதிகார துஷ்பிரயோகம், ஆதாய முரண்.

`புதிய கம்பெனிகள்; வாரிசுகளுக்காக மீறப்பட்ட விதிகள்!'- வீட்டுவசதி வில்லங்கத்தில் சிக்கிய ஓ.பி.எஸ்?

தர்மயுத்தத்தைத் துறந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்ததையும் மறந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் பதவியை `புன்னகை’ மின்ன ஏற்றுக்கொண்டதன் ரகசியப் பின்னணி இதுதானா? துணை முதல்வர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்திடும் உரிமை உண்டு. அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக்கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரிடம் விளக்கம் பெற தொடர்ந்து முயற்சி செய்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து அவரது உதவியாளரை தொடர்பு கொண்டோம். அவர், தான் தற்போது டெல்லியில் இருப்பதாகவும், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக, துணை முதல்வர் தரப்பில் விளக்கம் அளித்தால் உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism