Published:Updated:

சசிகலாவை அதிமுக-வுக்குள் ஐக்கியமாக்கும் முன்னெடுப்பில் பின்வாங்குகிறாரா தினகரன்?!

சசிகலா, தினகரன்

'ஏற்கெனவே அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரம்மிக்க பதவிகளில் ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் இருந்துவருகிறார்கள். இந்த நிலையில், தனக்கான இடம் எந்தவகையில் அதிகாரம்மிக்கதாக இருக்கும்?' என்ற கேள்வி டி.டி.வி.தினகரனிடம் இருக்கிறது.

சசிகலாவை அதிமுக-வுக்குள் ஐக்கியமாக்கும் முன்னெடுப்பில் பின்வாங்குகிறாரா தினகரன்?!

'ஏற்கெனவே அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரம்மிக்க பதவிகளில் ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் இருந்துவருகிறார்கள். இந்த நிலையில், தனக்கான இடம் எந்தவகையில் அதிகாரம்மிக்கதாக இருக்கும்?' என்ற கேள்வி டி.டி.வி.தினகரனிடம் இருக்கிறது.

Published:Updated:
சசிகலா, தினகரன்

`அதிமுக-வில் சசிகலாவை இணைக்க எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவது பழைய கதையாகி, 'டி.டி.வி.தினகரனுக்கே இந்த முடிவில் முழு விருப்பம் இல்லை' என்ற தகவல் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்!

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் அதிர்ந்துபோயிருக்கிறது அ.தி.மு.க வட்டாரம். சிறைவாசம் முடிந்து வெளிவந்ததிலிருந்தே, அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவரும் சசிகலாவுக்கு, கட்சியின் இந்தத் தேர்தல் தோல்விகள் புதிய வழி காட்டியிருக்கின்றன.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க-வில் இருந்துவரும் சசிகலா ஆதரவுத் தலைவர்களும் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, 'அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர். தொண்டர்கள் தரப்போ இன்னும் வெளிப்படையாக, 'தோல்விக்குப் பொறுப்பேற்று, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் பதவி விலகி, தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என்று ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிவருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு சசிகலாவுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க நிர்வாகிகள் தீர்மானம் இயற்றிவந்தபோதிலும் ஒருசில மாவட்டங்கள் தீர்மானம் இயற்ற மறுத்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில், தற்போது தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே, 'சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்கக் கோரி' மனு கொடுத்திருப்பதும், வெளிப்படையாகப் பேட்டி அளித்துவருவதும் அரசியல் அரங்கை அதிரவைத்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க-வின் எதிர்கால நலன் குறித்து சிந்திப்பவர்களும்கூட, '50 ஆண்டுக்கால அ.தி.மு.க இது போன்ற தொடர் தோல்விகளை ஒருபோதும் சந்தித்ததில்லை. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் கட்சியில் இல்லாததே தோல்விக்கான அடிப்படை. அதை ஈடுகட்டும்விதமாக சசிகலாவை கட்சியில் இணைப்பதோடு, பிரிந்துபோன அ.ம.மு.க கட்சியையும் அ.தி.மு.க-வோடு இணைக்க வேண்டும்!' என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பரபரக்கும் இந்த அரசியல் அழுத்தங்களின் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கனிந்துவரும் நேரத்தில், 'அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்புக்கு இப்போதைக்கு எந்தக் கருத்தையும் கூற முடியாது' என்று கூறி டி.டி.வி.தினகரன் திடீர் பல்டி அடித்திருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையுமே 'திடுக்'கிட வைத்திருக்கிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அண்மையில் செய்தியாளர்களிடையே பேசிய டி.டி.வி.தினகரன், ''ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவரத்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. மற்றபடி, அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கம் அல்ல. அதனால்தான் கட்சிகள் இணைப்பு குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து மட்டும் குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், அ.ம.மு.க தொண்டர்களின் விருப்பம் என்னவென்று தெரியாமல், தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.

தேர்தல்களில் வேண்டுமானால், நாங்கள் தோற்றிருக்கலாம். ஆனால், நிச்சயமாக ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவோம். அதற்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முயல்வோம்!'' எனக் கூறியிருக்கிறார்.

இது குறித்துப் பேசுகிற அ.ம.மு.க முக்கியப்புள்ளிகள், ''தனியே கட்சி ஆரம்பித்து, பல்வேறு சிரமங்களுக்கிடையே தேர்தல்களையும் எதிர்கொண்டுவருகிறார் டி.டி.வி.தினகரன். அவரின் உழைப்புக்குப் பலனாக மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும்கூட, 'தனித்து விளங்கும் கட்சி, ஆங்காங்கே சில இடங்களில் வெற்றி' என தமிழக அரசியலில் தனித்துவம்மிக்கத் தலைவராக வலம்வருகிறார். இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் அ.தி.மு.க-வோடு அ.ம.மு.க-வை இணைக்க நேரிட்டால் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடுவோம் என்று எண்ணுகிறார்.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்.

ஏனெனில், சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்கும் பேச்சுவார்த்தைகளில், 'டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினர் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது' என்ற நிபந்தனையைத்தான் சசிகலா விரும்பிகளே முன்வைத்துவருகின்றனர். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்து அ.தி.மு.க-வில் சசிகலா இணைய மறுத்தாலும் அல்லது நிபந்தனையை ஏற்று இணைந்துவிட்டாலும்... பாதிப்பு என்னவோ தனக்குத்தான் என்ற தெளிவில் இருக்கிறார் டி.டி.வி.

எனவேதான், 'அ.தி.மு.க - அ.ம.மு.க இணைய வேண்டும்; கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என்றெல்லாம் காலம் கனிந்துவரும் சூழலில், அதற்கு முட்டுக்கட்டை போடும்விதத்தில் பேட்டியளித்துவருகிறார் டி.டி.வி'' என்கின்றனர்.

இந்த விவகாரங்களையெல்லாம் உன்னிப்பாக கவனித்துவரும் அரசியல் விமர்சகர் ப்ரியன் நம்மிடம் பேசும்போது, ''டி.டி.வி.தினகரன் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக அ.ம.மு.க என்றொரு கட்சியை ஆரம்பித்து தனி ஆவர்த்தனம் வாசித்துவருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்கூட, இரண்டு பேரூராட்சிகளைக் கைப்பற்றியிருக்கும் அ.ம.மு.க., தமிழ்நாடு முழுக்க 1.38% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பல இடங்களில் அ.தி.மு.க தோல்வி பெறுவதற்குக் காரணமாகவும் இந்த வாக்குவங்கி இருந்திருக்கிறது.

ப்ரியன்
ப்ரியன்

இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குள் சசிகலா செல்ல நேர்ந்தால், அங்கே நமக்கு என்ன பொறுப்பு கிடைக்கும் என்ற கேள்வி டி.டி.வி.தினகரனிடம் இருக்கிறது. அதேசமயம், கட்சியை வலுப்படுத்த நினைக்கும் அ.தி.மு.க தலைவர்களேகூட, சசிகலாவை ஏற்றுக்கொண்டால், கூடவே அவரது குடும்பத்தையும், குறிப்பாக டி.டி.வி.தினகரனையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் வருமே என்ற பயத்தில் இருக்கின்றனர்.

காரணம்.... கடந்த நான்கு ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் எதுவுமின்றி, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் சுதந்திரமாகப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு, மறுபடியும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் போய் சிக்கிக்கொள்வது பேராபத்தாகவே முடியும் என்று எண்ணுகிறார்கள். எனவேதான், சசிகலாவை ஏற்றுக்கொள்பவர்கள்கூட, டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அழுத்தமாக நிபந்தனை விதிக்கிறார்கள்.

ஆனால், டி.டி.வி.தினகரனோ, 'ஏற்கெனவே அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரம்மிக்க பதவிகளில் ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் இருந்துவருகிறார்கள். இந்த நிலையில், சசிகலாவுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுவிட்டால், தனக்கான இடம் எந்தவகையில் அதிகாரம்மிக்கதாக இருக்கும்?' என்ற சந்தேகத்துடனேயே இருந்துவருகிறார்.

சசிகலா - டி.டி.வி.தினகரன்
சசிகலா - டி.டி.வி.தினகரன்

எனக்குத் தெரிந்தவரையில், அ.தி.மு.க-வில் சசிகலா இணைப்பு குறித்தும், இ.பி.எஸ்-ஸுக்கு இணையாகக் கட்சிப் பொறுப்பை டி.டி.வி.தினகரனுக்கு வழங்குவது குறித்தும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அறிகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமானால், விரைவில் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு அரங்கேறும். சசிகலா, டி.டி.வி.தினகரன் மறுபடியும் அ.தி.மு.க-வில் செல்வாக்கு பெறத் தொடங்குவார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், விரைவிலேயே சசிகலா புதிய கட்சி தொடங்குவார். இரண்டு ஆண்டுகள் கழித்து வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., அ.ம.மு.க மற்றும் சசிகலாவின் புதிய கட்சிகளோடு கைகோத்து பா.ஜ.க தேர்தலைச் சந்திக்கும்'' என்கிறார் விளக்கமாக.