Published:Updated:

காங்கிரஸிடம் நெருக்கத்தைக் குறைக்கிறதா திமுக?! - ஆதங்க அழகிரியும் சமாளிப்பு ஸ்டாலினும்

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

``முதல்வர் எங்களுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்” என கே.எஸ்.அழகிரியும், ``பேசுவதைவிட செயலையே அதிகம் விரும்புகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணி என்ன?

காங்கிரஸிடம் நெருக்கத்தைக் குறைக்கிறதா திமுக?! - ஆதங்க அழகிரியும் சமாளிப்பு ஸ்டாலினும்

``முதல்வர் எங்களுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்” என கே.எஸ்.அழகிரியும், ``பேசுவதைவிட செயலையே அதிகம் விரும்புகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனின் மகள் திருமண விழாவில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த விழா மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக அவர் குறைத்துப் பேசுவதில் தவறில்லை என்றாலும் கூட, நண்பர்களோடும், தங்களைப் போன்ற தோழமைக் கட்சிகளோடு மட்டுமாவது முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும்” என விழாவில் மேடையில் பேசினார். மேலும், அவர் ``இந்தக் கருத்தை பொது மேடையில் கூற வேண்டும் என்ற அவசியம் தனக்கில்லை என்றாலும் நட்பு கருதியே இதைச் சொல்கிறேன்.” எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``நான் பேசுவதை விடச் செய்து காட்டுவதிலேயே அதிக கவனமாக இருக்கிறேன்.” எனப் பதிலளித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் கே.எஸ்.அழகிரியிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்தக் கருத்து, இடப்பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டதாகவும் தேர்தல் பேச்சுவார்த்தையின்போது தி.மு.க உரிய மரியாதை கொடுக்காமல் தவிர்க்கிறது என்பதன் வெளிப்பாடும்தான் என்கின்றனர்.

கே.எஸ்.அழகிரி - துரைமுருகன்
கே.எஸ்.அழகிரி - துரைமுருகன்

தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே நெருக்கத்தைத் தி.மு.க குறைத்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இந்தப் பேச்சு எனக்கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரி பேச்சுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் இது குறித்துப் பேசினோம், “கே.எஸ்.அழகிரி பேசியது ஆதங்கத்தோடு, மென்மையாக வெளிப்பட்ட ஒரு கருத்து. தி.மு.க உடனான காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள கூட்டணி இன்றைக்கு, நேற்றைக்கு உருவான சந்தர்ப்பவாதக் கூட்டணி இல்லை. கொள்கை சார்ந்த கூட்டணி. 2004 தொடங்கி, 2016 தவிர தமிழ்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தலிலும் தொடரும் கூட்டணி. முதல்வரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி சந்தித்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியான, நிறைவான சந்திப்பு. “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என எங்கள் கட்சி சார்பில் சந்தித்துப் பேசியபோது “தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்றுச் செயல்பட வேண்டும். அவர்களுக்கு உரிய, அவர்கள் பலமாக இருக்கும் தொகுதிகளை ஒதுக்குவதோடு தேர்தலில் முழுவதுமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும், உதாசீனப்படுத்தக் கூடாது என உறுதியாகச் சொல்லியிருக்கிறேன். இதில் ஏதாவது குறை இருந்தால் நிச்சயம் மாவட்டச் செயலாளர்களிடமோ என்னிடமோ நேரடியாக பேசலாம்” என உறுதியளித்திருக்கிறார்.

கோபண்ணா காங்கிரஸ்
கோபண்ணா காங்கிரஸ்

பா.ஜ.க – அ.தி.மு.க இடையேயான உறவு நிர்ப்பந்தத்தில் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தில் உருவானது. அவர்களுக்குள் பேசிக் கொள்வதை எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிக் கொள்வதோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. எங்கள் தலைவர் பேசிக் கொண்டது முரண்பாட்டில் எழுந்தவை அல்ல. நட்பு ரீதியிலானது.” என விளக்கமளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கண்ணதாசனிடம் கேட்டோம் ``தங்களுடன் உள்ள கூட்டணிக் கட்சிகளை மரியாதையாக நடத்துவது மட்டுமல்லாமல் தங்களுக்கு நிகராக நடத்தும் ஒரே கட்சி தி.மு.க மட்டும்தான். ஆட்சிக்கு வந்ததால் புறக்கணிப்பதோ, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதோ எப்போதும் தி.மு.க செய்ததில்லை. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அடிமட்டத் தொண்டர்கள் பங்கேற்கும் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக்குள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தத் தேர்தலைப் பொறுத்தளவில் தலைமைக்கு வர வேண்டிய தேவையில்லை. தலைவர் மாவட்டச் செயலாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கிவிட்டார் தலைவர். எனவே, கூட்டணிக் கட்சிகளை மாவட்டச் செயலாளர்களும் மரியாதையோடே நடத்துவார்கள். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்குள் நடக்கும் சலசலப்பை வைத்து இந்தக் கேள்வி எழுகிறது என்கிறேன். அவர்களின் ஆராய்ச்சி வேறு, அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் வேறு. தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கோடு இருக்கும் கட்சி தி.மு.க. எனவே, அதன் அனைத்துத் தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள்.

கண்ணதாசன் திமுக
கண்ணதாசன் திமுக

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் தொகுதிகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டு கொடுத்த கட்சி தி.மு.க. இது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே, இயல்பாகப் பேசிக்கொண்ட ஒரு விவகாரத்தைத் தேவையின்றி அரசியலாக்க வேண்டாம்.” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism