Published:Updated:

``மோடியிடம் பணிகிறாரா எடப்பாடி?”- சட்டசபையில் அ.தி.மு.க-வுக்குக் கொம்பு சீவிய தி.மு.க!

சட்டசபை
சட்டசபை

ஒரே நாளில் மத்திய அரசின் மூன்று அதிரடி திட்டங்களுக்கு ஆளும்கட்சியை வைத்து மத்திய அரசுக்கு எதிராக கொம்பு சீவ வைத்துள்ளது தி.மு.க. இன்றைய சட்டசபை நிகழ்வுகளுக்கு என்ன ரியாக்ஷன் மத்திய அரசிடமிருந்து வரப்போகிறது என்பது போகபோகவே தெரியும்.

அ.தி.மு.க ஆட்சி மத்திய பி.ஜே.பி யின் அடிமை ஆட்சியாகவே இருக்கிறது“ என்று எதிர்கட்சிகள் விமர்ச்சித்துவரும் நிலையில், மோடி அரசு கொண்டுவந்த பல அதிரடி திட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா என்று கேள்விகளையும் கவனஈரப்பு தீர்மானங்களையும் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க-வை வைத்து ஆட்டம்காட்ட ஆரம்பித்துள்ளது தி.மு.க.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மோடியின் தலைமையிலான பி.ஜே.பி அரசு நாடாளுமன்றத்தில் “முற்பட்ட சமூகத்தினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு”சட்டத்தை அவசரமாக கொண்டுவந்தது. இந்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தி.மு.க உள்ளிட்ட ஒருசில கட்சிகளின் எதிர்ப்புடன் உடனடியாக நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வு முடிந்த பிறகு மருத்துவத்துறையில் மாணவர் சேர்க்கையின் போது இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை இருபத்தி ஐந்து சதவீதம் அதிகரித்து கொள்ளலாம் என்று பி.ஜே.பி மாநில அரசுகளுக்கு துாண்டில் போட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுகுறித்த கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.

அதில் அவர் “ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பினோம். அதுவே இன்னும் அலமாரியில் துாங்கிக்கொண்டிருக்கிறுது. இப்போது முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இன்னும் பாதிக்கபடுவார்கள். இடஒதிக்கீட்டை அமல்படுத்தினால் இருபத்தி ஐந்துசதவீத இடங்கள் கூடுதலாக ஒதுக்கபடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 25 சதவீதம் என்ற கவர்ச்சி வலையில் இந்த அரசு விழுந்துவிடக்கூடாது. சமூகநீதியை காத்த வீராங்கனை என்ற பட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு பட்டம் உண்டு. அவர் வழியில் ஆட்சிநடத்துவதாக சொல்லும் நீங்கள் இந்த இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளகூடாது. தமிழ்நாடு சமூகநீதியின் தொட்டில் .ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதிக்கீட்டை இந்த அரசு ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சணை குறித்து உடனடியாக அங்கிகரிக்கபட்ட அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதற்கு பதில் அளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “மத்திய அரசு நமக்கு அனுப்பிய கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நமது மாநிலத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பங்கமும் மருத்துவகல்வியில் ஏற்படாது. இந்த பிரச்சணை குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தபடும்” என்று பதில் அளித்தார். இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி “இந்த விவகாரத்தில் அங்கிகரிக்கபட்ட அனைத்துகட்சிகளின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும்” என்று பதில் அளிக்க, முதல்வரின் பதிலை தி.மு.கவினரும் வரவேற்றனர்.

தி.மு.க உறுப்பினர் ஏ.வ.வேலு “ஒரே நாடு, ஓரே குடும்பஅட்டை” குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.“ இந்த திட்டத்தை மத்திய அரசை கொண்டுவந்ததன் நோக்கமே, வடமாநில மக்களை தமிழகத்தில் குடியேற வைத்து நமது சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும். தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.மத்திய அரசு கொண்டுவரும் ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல், ஒரே கல்வி என்ற அனைத்துமே மாநில சுயாட்சிக்கு வேட்டுவைப்பதாக உள்ளது. இதற்கு மாநில அரசு நிலைப்பாட்டில் இருக்கிறது” என்று கிடுக்குபிடி போட்டார். மத்திய அரசின் திட்டங்களை சமீபகாலங்களில் மாநில அரசு நேரடியாக எதிர்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. தி.மு.க வின் இந்த கேள்விக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் விலையில்லா அரசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுவருகிறது.

மோடி- எடப்பாடி பழனிசாமி
மோடி- எடப்பாடி பழனிசாமி

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாத பல சலுகைகள் நம்மாநிலத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வந்து ரேஷன் அட்டை கேட்போருக்கு முன்னுரிமை அட்டை மட்டுமே வழங்கபட்டுவருகிறது. அதுவும் அவர்கள் சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டையை சமர்பித்த அந்த சான்றிதழை இணைத்தால் மட்டுமே இங்கு குடும்ப அட்டைக்கு விண்ணபிக்க முடியும். இநதுபோன்ற பல்வேறு அம்சங்களை கவனித்தில் கொண்டு தற்போது தமிழகத்தில் செயல்படுத்தபடும் பொதுவிநியோகத்திட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும்.அதேபோல் விலையில்லா அரிசி திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்” என்று அறிவித்தார். இதனால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக கொண்டுசெலுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மும்மொழி கொள்கை குறித்தும் சட்டசபையில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கையில் பேசிய தி.மு.க வினர் இதுகுறித்து கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் “ இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது.” என்று பதில் அளித்தார். ஒரே நாளில் மத்திய அரசின் மூன்று அதிரடி திட்டங்களுக்கு ஆளும்கட்சியை வைத்து மத்திய அரசுக்கு எதிராக கொம்பு சீவ வைத்துள்ளது தி.மு.க. இன்றைய சட்டசபை நிகழ்வுகளுக்கு என்ன ரியாக்ஷன் மத்திய அரசிடமிருந்து வரப்போகிறது என்பது போகபோகவே தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு