Published:Updated:

அஜய் தேவ்கன் Vs கிச்சா சுதீப்: இந்தி தேசியமொழியா... அலுவல் மொழியா?!

தேசியமொழி சர்ச்சை - சுதீப், அஜய் தேவ்கன்

``இந்தியாவில் ஒரு பகுதியினர் அறியாமை காரணமாக, இந்திதான் தேசியமொழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபலங்களே இந்திதான் தேசிய மொழி என்று சொல்வது அதிர்ச்சியைத் தருகிறது."

அஜய் தேவ்கன் Vs கிச்சா சுதீப்: இந்தி தேசியமொழியா... அலுவல் மொழியா?!

``இந்தியாவில் ஒரு பகுதியினர் அறியாமை காரணமாக, இந்திதான் தேசியமொழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபலங்களே இந்திதான் தேசிய மொழி என்று சொல்வது அதிர்ச்சியைத் தருகிறது."

Published:Updated:
தேசியமொழி சர்ச்சை - சுதீப், அஜய் தேவ்கன்

இந்தியா முழுவதும் `இந்தித் திணிப்பு' பற்றிய விவாதங்கள் மீண்டுமொரு முறை விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் ட்விட்டர் பதிவுதான் இந்த விவகாரம் விஸ்ரூபமெடுக்கக் காரணமாக அமைந்திருக்கிறது. அஜய் தேவ்கனின் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாகிவருகின்றன.

சுதீப்
சுதீப்

சுதீப்பின் பேச்சு... அஜய் தேவ்கனின் பதிவு!

கன்னட நடிகர் கிச்சா சுதீப் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ``இந்தி இனி ஒருபோதும் தேசியமொழி கிடையாது" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்க நினைத்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தி இதற்கு முன்பும்... இப்போதும்... இனிமேலும் நமது தாய்மொழியாக, தேசியமொழியாக இருக்கும்" என்று இந்தியில் பதிவிட்டிருந்தார். அதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த சுதீப், ``நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனென்றால், நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டிருந்தால், அதை உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்... நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்" என்று சொல்லிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர், முன்னாள் முதல்வர்களின் ஆதரவு!

இந்த நிலையில், #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டானது. இதையடுத்து கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒருபோதும் இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்கவேண்டியது ஒவ்வோர் இந்தியனின் கடமை'' என்று பதிவிட்டிருந்தார்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ``ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி, ஓர் அரசு என இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தும் பா.ஜ.க-வின் ஊதுகுழலாக உளறுகிறார் அஜய் தேவ்கன்'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``மொழிகளால்தான் நமது மாநிலங்கள் உருவாகின. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதீப் கூறியது சரிதான், அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்" என்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தி தேசிய மொழியா?

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343-ல், `தேவநாகரி எழுத்துகளைக்கொண்ட இந்தி மொழியும், ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் (Official Languages)' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலமும், தேவநாகரி எழுத்துகள்கொண்ட இந்தியும், இந்தியாவின் அலுவல் மொழிகள் என்பதை இந்தச் சட்டப் பிரிவு உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தி, இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது தெளிவாகிறது. இருந்தும், பலரும் இதை ஏற்க மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அரசியலமைப்புச் சட்டம்
அரசியலமைப்புச் சட்டம்

இது குறித்துப் பேசும் மொழி வல்லுநர்கள் சிலர், ``இந்தியாவில் ஒரு பகுதியினர் அறியாமை காரணமாக, இந்திதான் தேசியமொழி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபலங்களே இந்திதான் தேசிய மொழி என்று சொல்வது அதிர்ச்சியைத் தருகிறது. அதேவேளையில், சில பிரபலங்கள் இந்தி தேசிய மொழி இல்லை என்பதைத் தெரிந்துவைத்திருந்தாலும், சில அரசியல் காரணங்களுக்காக அதை மறைத்து, தவறான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவிலுள்ள 43.63 சதவிகிதம் பேர் தங்களது முதல் மொழியாகவோ, தாய்மொழியாகவோ இந்தியைக் குறிப்பிட்டிருந்தனர். மீதமுள்ள 56.37 சதவிகிதம் பேர் இந்தி அல்லாத பிராந்திய மொழியைத்தான் தாய்மொழியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கணக்கெடுப்பு நடத்தினால், இந்தி பேசுபவர்களின் சதவிகிதம், 2011 கணக்கெடுப்பைவிடக் குறைந்திருக்கும் என்றே தெரிகிறது. மொழிவாரியாக பன்முகத்தன்மைகொண்ட ஒரு நாட்டில், ஒரே மொழியை தேசிய மொழியாக்குவது எப்படிச் சரிவரும்'' என்று கேள்வியெழுப்புகிறார்கள்.

அஜய் தேவ்கனுக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்த சிலர், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தி தேசியமொழியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டில் அதிகம் பேர் எந்த மொழியைப் பேசுகிறார்களோ, அந்த மொழி தேசிய மொழியாகத்தான் இருக்க முடியும். இந்தியாவிலுள்ள அனைவரும் இந்தி கற்றுக்கொண்டால் நிச்சயம் நம் நாடு மேலும் வளர்ச்சியடையும்'' என்று வாதிடுகிறார்கள்.

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா
நவீன வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, ``ஒரே தேசியமொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டுப் போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகள், விளைவுகளிலிருந்து வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக் கூடாது'' என எச்சரிக்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism