நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கையைத் தொடர்ந்து அனைத்து எம்.பி-க்களும் பேசிவருகின்றனர். இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மாநிலங்களவையில் மலையாள நடிகரும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-யுமான சுரேஷ் கோபி பேசினார்.
சுரேஷ் கோபி பேச முற்பட்டு எழுந்து நின்றபோது, அவரைப் பார்த்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, ``நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறீர்களா அல்லது இது தாடியா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, ``இது தாடிதான். இது என்னுடைய அடுத்த படத்துக்கான புதிய தோற்றம்'' என்று விளக்கமளித்தார். இதைப் பார்த்து அனைவரும் மக்களவையில் கலகலவெனச் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism