Published:Updated:

சென்னை: `கவுன்சிலர் அலுவலகமா... கட்சி அலுவலகமா?’ - தண்ணீர் பந்தல் சர்ச்சையும் கவுன்சிலர் விளக்கமும்

171-வது வார்டு கவுன்சிலர் அலுவலகம்

கட்சி சார்பற்ற, பொதுமக்கள் வந்துசெல்லும் கவுன்சிலர் அலுவலகத்தில், தி.மு.க பேனரை மாட்டி, தண்ணீர் பந்தல் திறந்து அமர்க்களம் செய்துள்ளனர் உடன்பிறப்புகள்.!

சென்னை: `கவுன்சிலர் அலுவலகமா... கட்சி அலுவலகமா?’ - தண்ணீர் பந்தல் சர்ச்சையும் கவுன்சிலர் விளக்கமும்

கட்சி சார்பற்ற, பொதுமக்கள் வந்துசெல்லும் கவுன்சிலர் அலுவலகத்தில், தி.மு.க பேனரை மாட்டி, தண்ணீர் பந்தல் திறந்து அமர்க்களம் செய்துள்ளனர் உடன்பிறப்புகள்.!

Published:Updated:
171-வது வார்டு கவுன்சிலர் அலுவலகம்

கோடை காலத்தில் உயிரினங்களுக்கு இன்றியமையாதத் தேவையாக இருப்பது குடிநீர். வெயில் காலத்தில் மக்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கோடையில் போட்டிப்போட்டுத் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் பந்தலில் மண்பானையிலோ, தண்ணீர் கேனிலோ குடிநீரை நிரப்பிவைத்து, அதைச்சுற்றி தங்களது கட்சித் தலைவரின் படத்துடன், பந்தலை அரேஞ்ச் செய்தவர் பெயரையும் பிரின்ட் எடுத்து பேனர் வைக்கிறார்கள். தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பேனர் இருக்கும்.

பழங்கள், ஜூஸ் விநியோகம்
பழங்கள், ஜூஸ் விநியோகம்

தண்ணீர் பந்தலின் அடுத்த கட்டமாக, தற்போது தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரி, மாம்பழம் போன்றவற்றை நிரப்பிவைத்து, அதனை மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தாண்டும் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க போன்றக் கட்சித் தலைவர்கள், தங்களது நிர்வாகிகளிடம் தண்ணீர் பந்தல்களைத் திறக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி களமிறங்கிய கட்சிகளின் நிர்வாகிகள், ஆங்காங்கே அதே பேனர் செட்டப்புடன் தண்ணீர் பந்தலை அமைத்துள்ளார்கள். இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளன, பல இடங்களில் தண்ணீர் பந்தல்களில் தண்ணீரே இல்லாத நிலையும் இருக்கிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க சார்பில் சென்னையில் பல இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பசுமை வழிச்சாலையில், கவுன்சிலர் அலுவலகத்துக்குள்ளேயே தி.மு.க பேனருடன் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

சாலையை மறித்து நிற்கும் தி.மு.க நிர்வாகிகள்
சாலையை மறித்து நிற்கும் தி.மு.க நிர்வாகிகள்

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசினார். ``சென்னை மாநகராட்சி 171-வது வார்டு கவுன்சிலரான கீதா முரளியின் கவுன்சிலர் அலுவலகம் பசுமை வழிச்சாலை தொடக்கத்தில் அமைந்துள்ளது. மே 4-ம் தேதி அங்கு தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறந்தனர். அதற்காக, கவுன்சிலர் அலுவலகம் என்றிருக்கும் பெயர்ப் பலகைக்கு மேலே முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, கவுன்சிலர் கீதா முரளி, அவரின் கணவரும் மயிலாப்பூர் கிழக்குப் பகுதிப் பொறுப்பாளருமான முரளி ஆகியோரின் படத்துடன் கூடிய பேனர் மாட்டப்பட்டுள்ளது. வாயிலின் இருபக்கங்களிலும், உதயநிதி பேனருக்கு நிகராக, மயிலை வேலு படமும் மாட்டப்பட்டிருந்தது.

கவுன்சிலர் கீதா முரளி, கணவர் முரளி
கவுன்சிலர் கீதா முரளி, கணவர் முரளி

அங்கு கவுன்சிலர் அலுவலகம் மட்டுமின்றி, பால்வாடியும் அமைந்துள்ளது. அதன் பெயர்ப் பலகையை அகற்றி, உள்ளே மாட்டிவிட்டனர். அதுபோக, குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் முகாமும் அங்கு உள்ளது. மே 4, 5 ஆகிய தேதிகளில், இந்த நிகழ்ச்சிக்காக தடுப்பூசி முகாமையே நிறுத்திவிட்டனர். மே 4-ம் தேதி காலையிலிருந்தே தி.மு.க-வினர் அப்பகுதியில் குவியத்தொடங்கிவிட்டார்கள். சரியாக எம்.எல்.ஏ-க்களும், நீதிபதிகளும் செல்லும் நேரத்தில் சாலையை மறித்தவாறு திறப்புவிழாவை நடத்தினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ் ஆகியோர் சட்டமன்றம் செல்லும்போது வேண்டுமென்றே சாலையை மறித்து, அவர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, எம்.எல்.ஏ அலுவலகம் என்பது எதிர்க்கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களாக வந்துசெல்லுமிடம். அங்கு கட்சி ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஆனால், தண்ணீர் பந்தலைத் திறந்துவைத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, அவரின் எம்.எல்.ஏ அலுவலகத்தில்தான் எப்போதுமே கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டுவார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான், கவுன்சிலர் கீதா முரளியும் அவரின் கவுன்சிலர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தலைத் திறந்துள்ளார். காலையிலிருந்து மதியம் வரை பழங்களை மக்களுக்குக் கொடுத்துவிட்டு, மதிய உணவுக்காகச் செல்லும்போது நிர்வாகிகள் மொத்தமாக பழங்களை தங்கள் வீடுகளுக்கு அள்ளிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். தண்ணீர் பந்தல் என்பது 24 மணிநேரமும் இருத்தல் வேண்டும். நள்ளிரவில் வழிப்போக்கர்களுக்கோ, ரோந்து செல்லும் காவலர்களுக்கோ, தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கோ கண்டிப்பாக தண்ணீர் தேவை இருக்கிறது. ஆனால், கவுன்சிலர் அலுவலகம் உள்ளே தண்ணீர் கேன் வைக்கப்பட்டிருப்பதால், மாலை 6 மணிக்குப் பிறகு கவுன்சிலர் அலுவலகம் பூட்டப்படும்போது, தண்ணீர் கேனையும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிடுகிறார்கள்” என்றார்.

மயிலை வேலு எம்.எல்.ஏ
மயிலை வேலு எம்.எல்.ஏ

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு கவுன்சிலர் கீதாவைத் தொடர்புகொண்டோம். விவரத்தைக் கேட்டவர் `ஒரு நிமிடம்' என்று அவரின் கணவர் முரளியிடம் கொடுத்தார். நாம் மீண்டும் விவரத்தைச் சொல்லி கவுன்சிலரிடம்தான் பேச வேண்டும் என்று சொல்லவே, மீண்டும் போனை வாங்கினார் கவுன்சிலர் கீதா. "அதுபற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. பேனர்களை எடுத்துவிடச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நான் நடத்தவில்லை, வேறொருவர் ஏற்பாடு செய்தார். இந்த இடத்தில் பேனர் வைக்கலாமா? என்று கேட்டார். நான் சரி என்று சொன்னேன். இதோ நான் ரிமூவ் பண்ண் சொல்லி விடுகிறேன். உள்ளே ஒரு அங்கன்வாடி மையம் இருக்கிறது. தடுப்பூசி போட வந்தவர்களை திருப்பி அனுப்பவில்லை. இரண்டு மூன்று பேர்தான் அன்று வந்திருந்தனர். அவர்களும் தடுப்பூசி செலுத்திவிட்டுத்தான் சென்றனர்" என்று குற்றசாட்டுகளை மறுத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism