Published:Updated:

ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?! #VikatanFactCheck

மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் படம் பற்றிய உண்மைத்தன்மை என்ன என்பதை நாம் சோதித்தோம்

ஸ்டாலின், உதயநிதி சாமி கும்பிடும் புகைப்படம்
ஸ்டாலின், உதயநிதி சாமி கும்பிடும் புகைப்படம்

ஸ்டாலின் புகைப்படம்:

மு.க.ஸ்டாலின் மாரியம்மனின் படத்தை வணங்குவது போன்ற புகைப்படமானது, மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ம் தேதியன்று, அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தும் படமாகும். கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் அந்தப் புகைப்படத்தை ஸ்டாலின் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். சிலர் அதை எடுத்து, கருணாநிதி படத்திற்குப் பதில் அம்மன் படத்தை வைத்து மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்டாலினின் அசல் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்
ஸ்டாலினின் அசல் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்

அந்தப் புகைப்படத்தில், கருணாநிதியின் படம் இருந்த இடத்தில், மாரியம்மனின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இதோபோல், உதயநிதி ஸ்டாலின் ஐயப்ப சாமியை வணங்குவது போன்ற புகைப்படமும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் படமும், கருணாநிதியின் படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டது இப்போது தெரியவந்துள்ளது. தன் தாத்தா கருணாநிதி படத்தின் முன் நின்று, உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தும் புகைப்படம் அது.

உதயநிதி ஸ்டாலினின் அசல் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்
உதயநிதி ஸ்டாலினின் அசல் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்

அந்தப் படத்தில் கருணாநிதிக்கு பதிலாக, சுவாமி ஐயப்பன் படத்தை சிலர் வேண்டுமென்றே மார்ஃபிங் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது.

எனவே, அந்த இரண்டு படங்களுமே மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்கள் என்பதை, அந்தப் படங்கள் வைக்கப்பட்டுள்ள பின்னணி செட்டப்பைப் பார்த்தாலே உறுதி செய்து கொள்ள முடியும்...