Published:Updated:

பீகார் மாநில காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா கன்னையா குமார்... ராகுலின் வியூகம் என்ன?

கன்னையா குமார் - ராகுல் காந்தி

பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா கன்னையா குமார்... ராகுல் காந்தியின் வியூகம் தான் என்ன?

பீகார் மாநில காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா கன்னையா குமார்... ராகுலின் வியூகம் என்ன?

பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா கன்னையா குமார்... ராகுல் காந்தியின் வியூகம் தான் என்ன?

Published:Updated:
கன்னையா குமார் - ராகுல் காந்தி

கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. மற்ற மாநில காங்கிரஸ் கமிட்டிகளைப் போலவே பீகார் காங்கிரஸ் கமிட்டியிலும் உட்கட்சிப்பூசல்கள் நிலவிவருகின்றன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அன்று, பீகாரின் காங்கிரஸ் தலைவராக இருந்த மதன் மோகன் ஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பதவி விலகியதை அடுத்து பீகார் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் பலரும், ``2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பீகாரில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். எனவே, புதிய தலைவரை நியமிப்பதோடு மாநில காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்'' என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பீகார் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான ரேஸில் தற்போது பீகார் காங்கிரஸின் செயல் தலைவராக இருக்கும் ஷ்யாம் சுந்தர் சிங் தீரஜ், காங்கிரஸின் சட்டமன்ற அவைத் தலைவராக இருக்கும் அஜீத் ஷர்மா ஆகியோர் இருந்துவருகிறார்கள். சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகளின் பெயர்களும் காங்கிரஸ் தலைவர் ரேஸில் அடிபடுகிறது. இருந்தும், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸுக்குத் தாவிய கன்னையா குமாரே பீகார் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கன்னையா குமார்
கன்னையா குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் இந்த கன்னையாகுமார்?

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர் கன்னையா குமார். இவர் அங்கு செயல்பட்டுவந்த ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாணவத் தலைவராக இருந்தபோது கன்னையா குமார், பல்வேறு சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவமும் இவருக்கு உண்டு. 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். சுமார் 22 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் கன்னையா குமார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல் காந்தியின் வியூகம் என்ன?

இந்த நிலையில் பீகார் காங்கிரஸ் தலைவராக கன்னையா குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து பீகார் அரசியலை உற்று நோக்கும் சிலர், ``பீகார் காங்கிரஸின் தலைவராக கன்னையா குமார் நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். 2020 சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது காங்கிரஸ். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தொண்டர்கள் பலரும், `அவர்களுக்கு அதிக சீட்கள் ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்' என காங்கிரஸை நொந்துகொண்டார்கள். அந்த அளவுக்கு பீகாரில் கட்சி பலவீனமடைந்திருந்தது.

எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக பீகாரில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது கட்சி மேலிடம். இதற்காக, ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற கன்னையா குமாரையே தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவை கட்சி மேலிடம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கன்னையா குமார் ஜே.என்.யூ மாணவர் அமைப்பில் தலைவராக இருந்ததால், அவரிடம் நல்ல தலைமைப் பண்புகள் இருப்பதாக ராகுல் காந்தி நம்புகிறார். அதுமட்டுமல்லாமல் பீகார் மக்கள், இளைஞரான எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். எனவே, இளைஞர் ஒருவரை காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக்கினால் அது நல்ல பலனைத் தரும் என ராகுல் காந்தி நம்புவதாகத் தெரிகிறது. எனவே, கூடிய விரைவில் கன்னையா குமார் பீகார் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்படுவார்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism