Published:Updated:

" `ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை, தற்போதுள்ள சூழ்நிலையில்..."- விகடன் வாசகர் கருத்துக்கணிப்பு முடிவுகள்

விகடன் கருத்துக்கணிப்பு

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வுசெய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. இதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

" `ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை, தற்போதுள்ள சூழ்நிலையில்..."- விகடன் வாசகர் கருத்துக்கணிப்பு முடிவுகள்

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வுசெய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. இதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

Published:Updated:
விகடன் கருத்துக்கணிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலையும், மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களையும் தனித்தனியாக நடத்திவருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு, 'நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதிக செலவினம் ஏற்படுகிறது' என்பது போன்ற காரணங்கள் அரசால் முன்வைக்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மறுபுறம், `இவ்வாறு தேர்தல் நடத்தும்போது, மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் முழு பதவிக்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா? அப்படிக் கலைக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகள் எப்படி எதிர்வினையாற்றும்?' என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்தத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணையமும் தெரிவித்தது.

இதையடுத்து, `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வுசெய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. இதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. அதில், ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. `ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையை பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் வரவேற்றிருக்கின்றன. இதற்கு மாறாக காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

பாஜக - தேர்தல் ஆணையம்
பாஜக - தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், இது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு வருகிறது இந்திய சட்ட ஆணையம். தற்போதுள்ள சூழ்நிலையில், இது "தேவையற்றது..." "தேவையானது..." "தற்போதைய முறையே தொடரலாம்..." என விருப்பத் தேர்வுகளையும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தக் கருத்துக்கணிப்பில் வாசகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கின்றனர். அதில் " `ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை தற்போதுள்ள சூழ்நிலையில்"

தேவையற்றது என 49 சதவிகித வாசகர்களும், தேவையானது என 33 சதவிகித வாசகர்களும், தற்போதைய முறையே தொடரலாம் என 19 சதவிகித வாசகர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதைத் தொடர்ந்து, தற்போது விகடனின் வாசகர் கருத்துக்கணிப்புப் பகுதியில், இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், இருக்கும் இடத்திலிருந்து தங்கள் தொகுதி தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்களிப்பு முறை "நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தும்" "நிச்சயம் பயனுள்ளது" "முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்" என்ற கருத்துக்கணிப்பு நடந்துவருகிறது. வாசகர்கள் தங்கள் கருத்தை அதில் தெரிவிக்கலாம்.

இங்கே க்ளிக் செய்யுங்க... https://www.vikatan.com/