Published:Updated:

நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?! - மறுக்கும் மத்திய அரசு... நடப்பது என்ன?!

பெட்ரோல், டீசல்

அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்று மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதைவிட பெட்ரோல் பங்குகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்குக் காரணம்.

நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?! - மறுக்கும் மத்திய அரசு... நடப்பது என்ன?!

அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்று மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதைவிட பெட்ரோல் பங்குகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்குக் காரணம்.

Published:Updated:
பெட்ரோல், டீசல்

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது செயற்கை தட்டுப்பாடா எனவும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தனியார் விற்பனை நிலையங்களைவிட, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கமும், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி காரணமாக எண்ணெய் நிறுவனங்களிலிருந்து விநியோகிஸ்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

பெட்ரோல்
பெட்ரோல்

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த நிலையில் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்ட வேண்டும் எனக் கோரினர். இந்தப் பிரச்னைக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் 4,500 பெட்ரோல் பங்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் குறிப்பிட்ட அளவே வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இத்தகைய கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) கடந்த சில நாள்களாக விற்பனை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு 50 சதவிகிதம் அளவுக்குக் கூடுதல் தேவை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்துவருகின்றன. இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விநியோகத் தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. விவசாய தேவை, மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பங்க்குகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக இந்தட்ஜ் தேவை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல்
பெட்ரோல்

எனினும் நாட்டின் பெட்ரோல், டீசல் உற்பத்தி தேவையைவிட அதிக அளவுக்கு உள்ளது. இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும். அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு, சில தற்காலிக தொழில்நுட்பப் பிரச்னைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே எண்ணெய் நிறுவனங்கள், டிப்போக்கள், விநியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும். டிப்போக்கள், விநியோக மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு, தேவைப்படும் மாநிலங்களில் சப்ளை செய்வதற்குக் கூடுதல் எரிபொருள்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்துப் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால், அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதைவிட பெட்ரோல் பங்குகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்குக் காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல், டீசல் போதுமான அளவுக்குக் கையிருப்பு இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism