Published:Updated:

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

உலகில் பல கடிதங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

உலகில் பல கடிதங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

Published:Updated:
கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?
சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்கும் எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பீகாரைச் சேர்ந்த சுதிர்குமார் ஓஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியுமாறு பீகார் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வார ஆனந்த விகடன் இதழில் இதுகுறித்து அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என விகடன் ஆசிரியர் குழு தீர்மானித்தது. அதற்கேற்ப, அச்சு இதழில் தலையங்கம், அட்டைப்படம், பிரபலங்களின் கருத்துகளுடன் கூடிய கட்டுரை என கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இத்தகைய சூழலில் , நேற்று ( 09.10.2019) மாலை பீகார் காவல்துறை, இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி இந்த வழக்கை முடித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. கருத்துச்சுதந்திரத்தைக் காப்பதில் ஆனந்த விகடன் எப்போதும் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும்.

லகில் பல கடிதங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னிக்கு எழுதிய கடிதம், நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம், அண்ணா தன் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் என்று எத்தனையோ கடிதங்கள் காலங்கடந்தும் நினைவுகூரப்படுகின்றன. இப்போதும் ஒரு கடிதம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. எழுதியது 49 பேர். எழுதப்பட்டது ஒரே ஒருவருக்கு. அவர்தான் மோடி.

‘’அமைதியை விரும்பும் இந்தியர் என்பதில் பெருமையடையும் நாங்கள், சமீபகாலமாக நம் நாட்டில் நடைபெற்றுவரும் துயரமான சம்பவங்களைக் கண்டு கவலையடைகிறோம்.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது நாட்டை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக நாடு என்றும் எல்லா மதத்தினரும், இனத்தவரும், ஜாதியினரும், பாலினத்தவரும் சமமானவர்கள் என்றே குறிப்பிடுகிறது. அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக சில விஷயங்களை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொலைவெறித்தாக்குல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேசியக் குற்ற ஆவண காப்பகம் அளித்திருக்கும் அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக 840-க்கும் மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

அதேபோல மத அடிப்படையில் 254 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. 2009 முதல், 2018 ஆண்டுவரை நடைபெற்றிருக்கும் இந்த வன்முறைகளில் 91 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 579 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர். இதில் 90 சதவிகிதக் குற்றங்கள் தாங்கள் பதவியேற்றபிறகு நடந்திருக்கிறது.

பிரதமர் அவர்களே, இந்த கொலைவெறித்தாக்குதல்களை கண்டித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறீர்கள். ஆனால், அது போதாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பிணையில் தப்பி வெளிவரமுடியாத அளவுக்கு கடுமையாகவும் விரைவாகவும் நடவடிக்கை தேவை. கொலைக் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் அதே தண்டனையைத்தான் கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் கொடுக்க வேண்டும். பிரதமர் என்ற முறையில் இந்த அநீதிகளுக்கு எல்லாம், நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றுக்கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. நமது அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு நம் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒருவர் எதிர்க்கிறார் என்பதற்காக அவரைத் தேச விரோதி என்றோ நகர்ப்புற நக்சல் என்றோ முத்திரை குத்தக்கூடாது. ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பது தேசத்தை விமர்சிப்பது ஆகாது. மாற்றுக்கருத்துக்கு இடமளிக்கும் சுதந்திரமான சூழல்தான் ஜனநாயகம் வலிமைபெற வழிவகுக்கும்.’’

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

இவைதான் அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள். இதுதான் தேசத்துரோகம் என்று பீகார் நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா, நடிகைகள் அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட 49 பேர் இப்போது தேசத்துரோகி ஆகியிருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமருக்கு மக்களின் பிரச்னைகள் குறித்து கடிதம் எழுதுவது தேசத்துரோகமா? தேசம் அனைவருக்கும் சமமானது, தேசத்தில் வசிக்கும் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் சமமான உரிமைகளும் சமமான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது தேசத்துரோகமா? ‘மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் சாதியின் பெயராலும் நிகழ்த்தப்படும் கொலைகள் மனித மாண்புக்கு எதிரானவை’ என்று சொல்வது தேசத்துரோகமா? ‘தேசம் என்பது வெறுமனே எல்லைக்கோடுகளால் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அல்ல; இணக்கத்துடன் வாழக்கூடிய மக்களே தேசம்’ என்று வலியுறுத்துவது தேசத்துரோகமா?

‘கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?’ என்ற கேள்வியை எழுப்புவோம். இந்தக் கேள்வி இந்தியாவில் வாழும் மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரின் கேள்வியாக மாறவேண்டும். அது நீதித்துறை மற்றும் அரசின் காதுகளில் எதிரொலிக்க வேண்டும்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

பேராசிரியர் அ.மார்க்ஸ்

“மாட்டிறைச்சி வைத்திருந்ததாகச் சொல்லி, கும்பலாகச் சேர்ந்து மனிதர்களை அடித்துக் கொலை செய்கிறார்கள். அதுபோன்ற கொடூரச்செயல்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவை. அவை, கண்டிக்கப்படவேண்டிய மனித உரிமை மீறல்கள். அவற்றைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமருக்கு இந்த நாட்டின் மதிப்புமிக்க கலைஞர்களும், எழுத்தாளர்களும் கடிதம் எழுதினார்கள்.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

பிரதமருக்கு அப்படிக் கடிதம் எழுதியது குற்றம் என்று ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் 49 பேர்மீதும் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு உத்தர விட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், இந்தியாவில் எந்த அடிப்படை உரிமையும் இல்லாமற்போய்விடும்”

மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன்

“ ‘இந்தியாவில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. அதைத் தடுத்துநிறுத்துங்கள்’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் திரைப்படக் கலைஞர்களும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். அந்த வகையில் அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள். அதற்காக அவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பாய்கிறது. அப்படியென்றால், இந்த நாட்டில் பேச்சுரிமைக்கு இடமில்லை என்பதற்கான சமிக்கையை இந்த ஆட்சி கொடுத்துவிட்டது என்று அர்த்தம்.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

தேசத்துரோகப் பிரிவை நம் அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டுவரும் சூழலில், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தேசத்துரோகச் சட்டத்தைக் காவல்துறை பயன்படுத்துவதற்கும் தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடு வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வருமா, வராதா என்பது அந்த நீதிபதிக்கு நிச்சயம் தெரியும். எனவே, அந்த மனுவை நீதிமன்றம் உடனே நிராகரித்திருக்க வேண்டும். மாறாக, தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்யுமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிமன்றத்தின் நடவடிக்கை கடும் கண்ட னத்துக்குரியது.

இந்த 49 பேரையும் வெறும் கலைஞர்களாகவோ, எழுத்தாளர்க ளாகவோ மட்டும் நான் பார்க்க வில்லை.

அவர்கள் தாங்கள் செய்கிற தொழிலில் மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கிறவர்கள். அவர்கள், அரசால் பாதுகாக்கப்படவேண்டிய மனித உரிமைக் காப்பாளர்கள். ஆனால், அவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த நேரத்தில், மனித உரிமை களைப் பாதுகாப்பதையே முழுநேரக் கடமையாகக் கொண்ட தேசிய மனித உரிமைகள்ஆணையம், இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, வெட்கத்துக்குரிய செயல்”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.

“கீழமை நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவானது, நீதித்துறைமீதான நம்பகத்தன்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சமம் என்று சொன்னாலும், நீதித்துறைக்குத்தான் கூடுதல் அதிகாரம் உள்ளது. ஏனென்றால், மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படுகிற சட்டத்தைத் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்குத்தான் உள்ளது. இந்தியக் குடிமக்களின் கடைசிப்புகலிடமாக நீதித்துறை இருக்கிறது. அந்த நீதித்துறையே இப்படி நடந்து கொண்டால் நாட்டின் குடிமக்கள் எங்கே போவார்கள்?

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

வெறுப்புப் பிரசாரத்துக்கு நீதித்துறையைப் பயன்படுத்து வதற்கான முயற்சி நடக்கிறது. கீழமை நீதிமன்றங்கள் மூலம் எந்த ஊரிலும் யார்மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிவுசெய்ய முடியுமென்றால், அது மிகவும் ஆபத்தானது. வழக்கமாக, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது நீதிமன்றத்துக்குச் செல்லும். ஆனால் இப்போது, நீதித்துறையிடம் போய் ஒரு புகார் மனுவை அளித்து, வழக்குப் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடும் போக்கு வந்துள்ளது.

ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்குக் காவல்துறையைப் பயன்படுத்துவதைப்போல, இப்போது நீதித்துறையைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். காவல்துறை அத்துமீறும்போது நீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுக்க முடியும். நீதிமன்றம் அத்துமீறினால், காவல்துறையால் அதைத் தடுக்க முடியாது.

கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் என்பது போட்டித்தேர்வு அடிப்படையில் நடக்கிறது. அதைத்தாண்டி, இந்த நியமனத்துக்கு வேறுசில முறை களைக் கொண்டுவர வேண்டும். கீழமை நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரின் தேர்வு மற்றும் பணி நியமனங்கள் இன்னும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். நீதித்துறைமீதான நம்பிக்கையைக் குலைப்பதற்கு இடம்கொடுக்கக் கூடாது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து 49 பேர்மீதான இந்த வழக்கை ரத்து செய்யலாம். ஆனால், செய்வார்களா என்று தெரியவில்லை”

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்.

“உங்கள் ஆட்சி சரியில்லை என்று பிரதமரை நோக்கிச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், இவர்கள் எழுதிய கடிதத்தில் அப்படிக்கூட எதுவும் சொல்லப்படவில்லை.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

‘கும்பல் கொலைகள் நடக்கின்றன. அதைத் தடுத்துநிறுத்துங்கள்’ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அது குற்றம் ஆகாது. எனவே, அந்தப் புகார் மனுவை மாஜிஸ்திரேட் நிராகரித்திருக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய அவர் உத்தரவிட்டது மிகவும் தவறானது. இதில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது, அந்தப் புகார் மனுவை அளித்த நபரைத்தான். அவர் யார், அவரின் அரசியல் பின்னணி என்ன, எதற்காக அவர் புகார் மனு அளித்தார் என்பதையெல்லாம் ஆராய வேண்டும்”

பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

“பீகார் மாநிலத்தில் சுதிர் குமார் ஓஜா என்கிற ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. இதில், பிரதமர் மோடி எங்கே வருகிறார்? இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் பிரதமர் மோடி மீதும், பா.ஜ.க மீதும் பாய்கிறார்கள். புகார் அளித்த அந்த வழக்கறிஞர் யார், உத்தரவு பிறப்பித்த நீதிபதி யார் என்பது பற்றியெல்லாம் இவர்கள் வாய்திறக்கவில்லை.

கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?

வழக்குப் பதிவுசெய்யப்பட்டது பீகார் மாநிலத்தில். அங்கு நடைபெறும் கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க இடம்பெற்றிருந்தபோதிலும், ஓர் எதிர்க்கட்சி போலத்தான் பா.ஜ.க அங்கு செயல்பட்டுவருகிறது. அங்கு முதல்வர் நிதிஷ்குமார் வைத்ததுதான் சட்டம். அப்படியிருக்கும்போது, பா.ஜ.க எப்படி அங்கு நீதிமன்றத்தில் அதிகாரம் செலுத்த முடியும்? ஆகவே, இந்த விவகாரத்தில் தவறாகப் பிரசாரம் செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism