Published:Updated:

`பாஜக-வினர் செய்த உதவியை கூட ஓ.பி.எஸ், இ.பி.எஸ் செய்யவில்லை?' - அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி?!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், மன அமைதிக்காகச் சிறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எ

``என்னைப் பாக்க யாரும் வராதீர்கள். நான் யாரையும் பார்த்துப் பேசும் மனநிலையில் தற்போது இல்லை" என்று வழக்கறிஞரைத் தவிரக் கட்சி நிர்வாகிகள், உறவினர்களையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், மன அமைதிக்காகச் சிறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எடப்பாடி மீது ராஜேந்திர பாலாஜிக்கு என்ன கோபம். சிறையில் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்கத்தொடங்கினோம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 3.1 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இது மட்டுமல்லாமல் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புகார்கள் பதிவாகின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தலைமறைவான ராஜேந்திர பாலாஜியைத் தேடிவந்த தனிப்படையினர், கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அவரைக் கைதுசெய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்தியச் சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்துவரப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அங்கு நிர்வாகக் காரணங்களால் திருச்சி மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், விவகாரம் அதுவல்ல என்றும் ராஜேந்திர பாலாஜிக்குப் பாடம் புகட்டவேண்டும் என்கிற கோணத்தில் ஆளும் கட்சி செக் வைப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்ன நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று அவர் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``ராஜேந்திர பாலாஜியின் பேச்சுதான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. சமீபகாலமாகவே அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

ஆனால் ராஜேந்திர பாலாஜி ஒருபடி மேலே போய் மோசமான தரம் தாழ்ந்த வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கும் வீடியோ, ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வட்ட மடித்துக் கொண்டிருக்கின்றன. இதை தி.மு.க தலைமை ரசிக்கவில்லையாம். இந்த விவகாரத்துக்குப் பதிலடி கொடுக்கவும் நினைக்கிறதாம்.

சிறையிலிருக்கும் அவருக்கு ஒருசில நெருக்கடிகளைக் கொடுக்க தலைமையிலிருந்து இன்ஸ்ட்ரக்ஷன் வந்துள்ளதாம். அதனை மதுரை மத்தியச் சிறையில் வைத்துக்கொண்டு செய்ய முடியாதாம். அப்படிச் செய்தால் அதிகாரிகளே விஷயத்தைக் கசியவிடுவதோடு,

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் சிலர் உதவி செய்யக்கூடும் என்பதால் வேண்டுமென்றே திருச்சி மாற்றியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அவர் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலிருந்து கைது செய்யப்பட்டது வரை எடப்பாடி, ஓ.பி.எஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.

அவரை பாதுகாக்க பா.ஜ.க-நிர்வாகிகள் சிலர் உதவியிருக்கிறார்கள். அந்த உதவியைக் கூட அ.தி.மு.க நிர்வாகிகள் செய்யாததால் ராஜேந்திர பாலாஜிக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறதாம். இந்த நிலையில், திருச்சி மத்தியச் சிறைக்குப் பார்க்க வரும் கட்சி நிர்வாகிகளை நேரில் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து வருகிறாராம்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அத்தோடு, `நான் யாரையும் பார்த்துப் பேசும் மனநிலையில் இல்லை!' என்று வழக்கறிஞரைத் தவிரக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் உறவினர்களையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். சிறையில் மனநிம்மதியை இழந்திருப்பதால் மன அமைதிக்காகச் சிறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் அவர் தொடங்கியிருக்கிறார்" என்றனர்.