Published:Updated:

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகப் போட்டி!- திருச்செந்தூர் தொகுதியைக் குறிவைக்கும் சசிகலா புஷ்பா?

சசிகலா புஷ்பா

தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதனை, மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா சந்தித்து ஒருமணி நேரம் வரை பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகப் போட்டி!- திருச்செந்தூர் தொகுதியைக் குறிவைக்கும் சசிகலா புஷ்பா?

தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதனை, மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா சந்தித்து ஒருமணி நேரம் வரை பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Published:Updated:
சசிகலா புஷ்பா

ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்த சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க-வில் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து பதவிகள் வழங்கப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இவருக்கு சீட் வழங்கிட வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் ஜெயலலிதாவிடம் பரிந்துரை செய்தார். அப்போது, அ.தி.மு.க-வுடன் ச.ம.க கூட்டணி வகித்ததால் தென்காசி, நாங்குநேரி தொகுதி ச.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது.

பா.ஜ.க-வில் இணைந்த சசிகலா புஷ்பா
பா.ஜ.க-வில் இணைந்த சசிகலா புஷ்பா

அதற்குப் பதிலாக, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மேயர் ஆனார். தொடர்ந்து, அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியும் கிடைத்தது. இவரது டெல்லி தொடர்புகள் சர்ச்சையாகின. இதனால், இவர் மீது அதிருப்தி அடைந்த ஜெயலலிதா, கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில், ``ஜெயலலிதா தன்னைக் கன்னத்தில் அறைந்தார்” என ராஜ்யசபாவில் அனைத்து எம்.பி-க்கள் மத்தியில் சபாநாயகரிடம் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்சியில் இவரது நீக்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், தொடர்ந்து எம்.பி-யாக நீடித்து வந்த அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவின்போது ஓ.பி.எஸ் அணிக்குச் சென்று, அங்கிருந்து டி.டி.வி. தினகரன் அணிக்குத் தாவினார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு பா.ஜ.க-வில் இணைய காய் நகர்த்தி, திட்டமிட்டபடியே சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். சசிகலா புஷ்பா மூலம் தென் மாவட்டத்தில் நாடார் சமுதாய வாக்குகளை ஈர்க்கலாம் எனத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க மேலிடம்.

சசிகலா புஷ்பா - சண்முகநாதன்
சசிகலா புஷ்பா - சண்முகநாதன்

மாநகராட்சி மேயர், ராஜ்யசபா எம்.பி என பதவி வகித்து வந்த சசிகலா புஷ்பா, வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியைக் குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி குடியுரிமைச் சட்டம் குறித்த விளக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி வந்த சசிகலா புஷ்பா, தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சண்முகநாதனை பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியானது.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது அவர்களின் சந்திப்பு. இதுகுறித்து கட்சியினர் சிலரிடம் பேசினோம், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், நாடார் சமுதாய மக்களின் ஆதரவு கணிசமாக இருப்பதைக் காரணம்காட்டி பா.ஜ.க மேலிடத்தில் கூறியுள்ளதாக அண்ணாச்சியிடம் சொன்னார் சசிகலா புஷ்பா. தனக்கு ஆதரவு தர வேண்டும் என அண்ணாச்சியிடம் கேட்டுக் கொண்டார்” என்றனர் சுருக்கமாக. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து களம் இறங்க திட்டமிட்டுள்ளார் சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதும் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்தும் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூரில் களம் இறங்கினாலும் அனிதாவை வெல்ல முடியுமா என்ற யோசனையிலும் உள்ளார் சசிகலாபுஷ்பா. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், அனிதாவை வீழ்த்திட சமுதாய மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சிகளைத் துவக்கியுள்ளாராம் சசிகலா புஷ்பா!

அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு பேசினாம். அவர், ``இந்த தகவல்களில் உண்மை இல்லை. முதலில் தேர்தல் அறிவிக்க வேண்டும்.. கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டணிக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என பல விஷயங்கள் இருக்கிறது. இப்போதே தேவையில்லாத வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்" என்றார்.