Published:Updated:

சேகர் பாபுவின் ஆன்மிக அணுகுமுறை, திராவிட மாடல் அரசின் இமேஜுக்குச் சாதகமா... பாதகமா?

சேகர் பாபு ( Twitter )

``இந்து சமய அறநிலையத்துறையால் நாத்திகத்துக்கோ, ஆத்திகத்துக்கோ எந்த உரசலும் இல்லை.” - கு.ராமகிருட்டிணன்

சேகர் பாபுவின் ஆன்மிக அணுகுமுறை, திராவிட மாடல் அரசின் இமேஜுக்குச் சாதகமா... பாதகமா?

``இந்து சமய அறநிலையத்துறையால் நாத்திகத்துக்கோ, ஆத்திகத்துக்கோ எந்த உரசலும் இல்லை.” - கு.ராமகிருட்டிணன்

Published:Updated:
சேகர் பாபு ( Twitter )

இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்கிற கேள்வி எழும் வகையில்தான் கடந்தகால தமிழ்நாடு அமைச்சரவை செயல்பாடுகள் இருந்து வந்துள்ளன. ஆனால் சேகர் பாபு அத்துறையின் அமைச்சர் ஆன நாள் முதல் தினமும் செய்தியாகிறது இந்து சமய அறநிலையத்துறை. அந்த அளவுக்குத் தனது செயல்பாடுகளால் பெயர் பெற்றுவரும் அமைச்சர் மீது நேர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஆதீனங்கள், மடாதிபதிகள், தீட்சிதர்கள், ஜீயர்கள்... தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கும் ஆளாகிவருகிறார். குறிப்பாக பா.ஜ.க-வின் கன்டன்ட் கிரியேட்டராக சேகர் பாபு இருக்கிறார் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது போன்ற ஒரு நிலையில் தான் சேகர் பாபுவின் ஆன்மிக அணுகுமுறை திராவிட மாடல் அரசின் இமேஜுக்குச் சாதகமா, பாதகமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரான கு.ராமகிருட்டிணனிடம் பேசினோம். “அரசு அனைவருக்குமானது. எல்லா மக்களுக்குமானதாகத்தான் அரசு இருக்க முடியும். அதில் பெரும்பான்மையாக ஆன்மிகமும், ஆன்மிகம் சார்ந்த மக்களும் இருக்கிறார்கள். சேகர் பாபுவுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு ஆன்மிகம் சார்ந்தது. அதில் நாத்திகத்துக்கோ, ஆத்திகத்துக்கோ எந்த உரசலும் இல்லை. அதற்கான பணிகளைச் செய்கிறார். அதைச் சரியாகச் செய்கிறார் என்பதற்கு அடையாளமே பார்ப்பனர்கள் இடத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு வருவதுதான். அறநிலையத்துறை என்பது கோயில், கோயில் சொத்துகள், கோயில் பராமரிப்புகள் சார்ந்தது. அதற்கான பணிகளைத்தான் அவர் செய்கிறார். சமூகநீதிக்கு உட்பட்டதுதான் திராவிட மாடல். இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என அனைத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். அதனால்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசே நியமித்திருக்கிறது.

கு.ராமகிருட்டிணன்
கு.ராமகிருட்டிணன்

ஆன்மிகத்தைவைத்து அரசியல் செய்வது பா.ஜ.க. ஒட்டுமொத்த திராவிட மாடலுக்கும் எதிரானது அவர்கள் கொள்கை. பொருளாதாரம் மற்றும் இன்ன பிற பிரச்னைகள் வைத்து அவர்களால் இங்கு பேச முடியாது. ஏனெனில் நாட்டிலுள்ள நெருக்கடிகள், வேலைவாய்ப்பின்மை என மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் மத்திய அரசுதான் காரணமாக இருக்கிறது. அதில் கைவைத்தால் பா.ஜ.க-தான் பதில் சொல்ல வேண்டும். எனவேதான் எளிமையாக மக்களுக்கு இருக்கும் மத நம்பிக்கையைவைத்து, இந்த அரசுக்குக் கெட்ட பெயர் உருவாக்க முடியுமா என்று இதைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால், இந்து விரோத அரசு என மக்களை நம்ப வைப்பதிலும் பா.ஜ.க இங்கு தோல்விதான் அடைந்துள்ளது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, ``சேகர் பாபு, தி.மு.க-வுக்கும் அவருடைய துறைக்கும், அரசாங்கத்துக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். தி.மு.க என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆன்மிகம், கடவுள், பக்தி, இறை நாட்டம், ஒழுக்கம், ஆகம விதிகள் போன்ற எதையுமே பொருட்கொள்ளாத ஒரு கட்சி, அரசு. அப்படி இருக்கும்போது எப்படி முழு மனதோடு சேகர் பாபு ஈடுபட முடியும்?

அவருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கலாம். அதை மறுக்கவில்லை. வரவேற்கிறேன். ஆனால், தி.மு.க ஒரு பக்கம் ஆன்மிகத்துக்குச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, மற்றொரு பக்கம் இந்து நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சேகர் பாபு என்ன முயற்சி செய்தாலும், ஆன்மிகம் என்று சொன்னாலும், உறுதியாக ஆன்மிகம் குறித்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அறிகுறி அது கிடையாது. மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் போன்ற இந்து நம்பிக்கைக்கு எதிரான சிறு அமைப்புகளுக்குச் செவி சாய்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்து அறநிலையத்துறை என்பது கோயில்களுக்குப் பாதுகாவலர்கள் கிடையாது. எல்லா கோயில்களுக்கும் சொந்தக்காரர் அந்த கோயிலின் கடவுள்தான். அவர்தான் அந்தச் சொத்துகளின் அதிபதி. அங்கு நிர்வாகம் செய்வது அறங்காவலர்களின் கடமை, உரிமை. அதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதைக் கேட்பதற்கும், மேற்பார்வை இடுவதற்கும் மட்டும்தான் இந்து அறநிலையத்துறையே தவிர, கோயில்களின் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கும்பாபிஷேகம் உட்பட எதிலும் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. கோயில்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்வதே சட்டவிரோதமான சொல், செயல். அதனால்தான் நாங்கள் ‘அரசே ஆலயத்தைவிட்டு வெளியேறு' என்று சொல்கிறோம். ‘கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிட்டது’ என்று கருணாநிதி எழுதிய வசனம் என்றைக்கு, எப்போது, யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அந்த வசனம் 60 ஆண்டுக்கால திராவிட ஆட்சிக்குப் பொருந்தும். கட்சிக்காரர்கள்தான் அறங்காவலர்களாக உள்ளனர். கோயிலைக் கொள்ளையர்களின் கூடாரமாக மாற்றியதுதான் இந்த திராவிட மாடல்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism