Published:Updated:

``தெரியாமல் ஃபார்வேர்டு செய்ய எஸ்.வி.சேகர் என்ன எழுதப் படிக்கத் தெரியாதவரா?” - நீதிபதி கேள்வி

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகக் கருத்து பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், எஸ்.வி.சேகருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும் தரக்குறைவான கருத்தையும் பதிவு செய்திருந்தார். இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இது குறித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மிதார் மொய்தீன் புகார் அளித்திருந்தார்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியிருந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் விடுவிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ``பதிவைத் தெரியாமல் பார்வேர்டு செய்திருக்கிறார் எஸ்.வி.சேகர். அதில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்துத் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததால் அதை நீக்கிவிட்டு, அந்தச் செயலுக்கு அவர் உடனடியாக மன்னிப்பும் கோரியிருந்தார்'' என்று தெரிவித்தார்.

Vikatan
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில், `எஸ்.வி.சேகர் பெண்கள் குறித்து தவறான கருத்தைப் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்டு செய்ததும் குற்றம்தான். அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது' என்று கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி,`` முகநூலில் வந்த தகவலைப் படிக்காமல் பார்வேர்டு செய்துவிட்டேன் என்று கூறுவதற்கு எஸ்.வி.சேகர் என்ன எழுதப் படிக்கத் தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கியப் பிரமுகர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதோடு, எஸ்.வி.சேகர் மீதான, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுசெய்ய இடைக்காலத் தடை விதித்தும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு