Published:Updated:

இ-பாஸ் முதல் கிசான் மோசடி வரை..! - தமிழக பா.ஜ.க-வின் லேட் ரியாக்‌ஷன்ஸ்

 பா.ஜ.க தலைவர் எல். முருகன்
பா.ஜ.க தலைவர் எல். முருகன்

இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதமே செய்தி வெளியாகி, பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் ஊழலுக்குத் துணைபோன அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டது.

பொதுவாக, மக்கள் பிரச்னைகள் திடீர் திடீரெனக் கிளம்பும். உடனுக்குடன், `சுடச்சுட’ அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லுவார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர் முருகனோ, கொஞ்சம் லேட்டாகத்தான் ரியாக்ட் செய்கிறார் என்கிற பேச்சு பி.ஜே.பி கட்சியினர் மத்தியிலேயே எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விவசாயி
விவசாயி
Vikatan Team

`கறுப்பர் கூட்டம்’ பிரச்னை முடிந்த பிறகு, வேல் பூஜைக்கு முருகன் அழைப்புவிடுத்தார். பிரச்னை வீரியமாக இருந்தபோது பேசாமல் இருந்துவிட்டு, லேட்டாக விழித்து வேல் பூஜை நடத்தினார். இதேபோல், இ-பாஸ் முறையை ரத்து செய்யச் சொல்லி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து ஒய்ந்த பிறகு, கடைசியாகக் குரல் கொடுத்தது தமிழக பி.ஜே.பி. `கொரோனா பரவாமலிருக்க, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமர் மோடி திரும்பத் திரும்ப விலியுறுத்திவருகிறார். ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர் எல். முருகன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டார்.

இந்த நிலையில், `பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தில் நடந்துவரும் மோசடியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று செப்டம்பர் 6-ம் தேதிதான் பி.ஜே.பி தலைவர் எல். முருகன் அறிக்கை கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 7) மதியம் 3 மணிக்கு தமிழக பி.ஜே.பி-யின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, புகார் மனு கொடுக்கப்போகிறார்கள்.

மாவட்டங்களிலுள்ள பி.ஜே.பி தலைவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கிறார்கள். இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதமே செய்தி வெளியாகி, பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் ஊழலுக்குத் துணைபோன அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டது. கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. முறைகேடாக பெயர் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றிய தீவிர விசாரணை நடக்கிறது. தமிழக பி.ஜே.பி தலைவர்கள் இப்போது திடீரென்று விழித்துக்கொண்டு ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லி புகார் மனு கொடுக்கப்போகிறார்கள்.

பா.ஜ.க முருகன்
பா.ஜ.க முருகன்

`ஏன் லேட்?’ என்று கருத்து கேட்க தமிழக பி.ஜே.பி தலைவர் முருகனுடன் தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. துணைத் தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம். ``ஏற்கெனவே இதை நாங்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறோம். இந்த ஊழலில் தொடர்புடையவர்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போது மனு கொடுக்கப்போகிறோம். அவ்வளவுதான்’' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு