Published:Updated:

`நளினி உள்ளிட்ட 5 பேர் வழக்கில் பாரபட்சம் காட்டுகிறதா தமிழக அரசு?” - என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

`பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, தங்களையும் விடுவிக்கக் கோரி மீதமுள்ள ஐவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை’ என்று புகார் சொல்லப்படுகிறது.

`நளினி உள்ளிட்ட 5 பேர் வழக்கில் பாரபட்சம் காட்டுகிறதா தமிழக அரசு?” - என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

`பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, தங்களையும் விடுவிக்கக் கோரி மீதமுள்ள ஐவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை’ என்று புகார் சொல்லப்படுகிறது.

Published:Updated:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். இவர்களில், பேரறிவாளன் மட்டும் கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளனின் கோரிக்கை மீது ஆளுநர் முடிவெடுக்கத் தாமதம் ஆனதால், உச்ச நீதிமன்றமே நேரடியாக விடுவித்துவிட்டது. இதே காரணம் தங்களுக்கும் பொருந்தும் எனக்கூறி, கடந்த ஆகஸ்டில் நளினி, ரவிச்சந்திரன் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அற்புதம்மாள் - பேரறிவாளன்
அற்புதம்மாள் - பேரறிவாளன்

அவ்வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், 'ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரின் உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல, நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நளினி, ரவிச்சந்திரனைத் தொடர்ந்து ராபர்ட் பயஸ், சாந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும், தங்களை விடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்குத் தொடர்ந்ததுள்ளனர். இவர்களது வழக்கையும், ஏற்கெனவே நடந்துவரும் நளினி, ரவிச்சந்திரன் வழக்கையும் இணைத்து, நீதிபதி காவாய் அமர்வில் அக்டோபர் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏழு தமிழர் விடுதலை
ஏழு தமிழர் விடுதலை

இந்தச் சூழலில், பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக அரசு எடுத்துக்கொண்ட அக்கறை, மற்றவர்களுக்கு இல்லை என்பதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

இது தொடர்பாக அமைச்சர் ரகுபதியிடம் பேசினோம்... "இல்லங்க உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் அவர்களே ஸ்டெப் எடுத்து விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத்துக்கு இதில் அதிகாரம் இல்லாததால், உச்ச நீமன்றத்தை தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். பேரறிவாளன் வழக்கில் என்ன முடிவெடுத்தீர்களோ, அதே முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வது, அவர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று சொல்வதாகத்தானே அர்த்தம்.

நாங்க எதிராகப் போகவில்லையே, அதே அக்கறையோடுதானே செயல்படுகிறோம். பேரறிவாளனுக்குக் கொடுத்தச் சலுகையை மற்றவர்களுக்கும் கொடுங்கள் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை. தமிழக அரசே விடுவிப்பது தொடர்பான ஃபைல்தான் ஆளுநரிடம் மாட்டிக்கொண்டுள்ளதே. அதனால், அந்த சிக்கலுக்கே நாங்கள் செல்லாமல், நீதிமன்றம் மூலமே தீர்வுகாணவே முற்படுகிறோம். பேரறிவாளனுக்கு ஒரு நிலைப்பாடு, மற்றவர்களுக்கு ஒரு நிலைப்பாடு என்பதெல்லாம் கிடையாது!" என்றார் தெளிவாக.