Published:Updated:

முல்லைப்பெரியாறு அணை திறப்பு: முன்னறிவிப்பு இல்லையென்ற கேரள அரசின் குற்றச்சாட்டு உண்மையா?!

முல்லைப்பெரியாறு
News
முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்துவருவதால் அக்டோபர் 23-ம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது. அதற்கு முன்பிருந்தே தமிழக பொதுப்பணித்துறை தரப்பிலிருந்து எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், நவம்பர் 30-ம் தேதி முதற்கட்டமாக முல்லைப்பெரியாறு அணையின் எட்டு மதகுகள் வழியாக 6,000 கனஅடி திறக்கப்பட்டது. பிறகு 10 மதகுகள் திறக்கப்பட்டு 8,000 கனஅடி திறக்கப்பட்டது. இதனால் அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, போதிய முன்னெச்சரிக்கை செய்த பிறகே தண்ணீர் திறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கேரளாவில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததாக தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகிறது.

ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு

கடந்த அக்டோபர் முதல் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் அக்டோபர் 23-ம் தேதி அணையின் நீர்மட்டம் 136-ஆக உயர்ந்தது. அதற்கு முன்பிருந்தே தமிழக பொதுப்பணித்துறை தரப்பிலிருந்து எச்சரிக்கை அறிவிப்புகள் பல கட்டங்களாக வெளியிடப்படுகின்றன. குறிப்பாக, இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு அணையின் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என கேரள அரசு கூறுவதில் நியாயம் இல்லை. கேரளாவில் அரசியல்வாதிகளின் தூண்டுல்களால் சிலர் மட்டுமே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த நிலையில், மக்களையும் தூண்டிவிடும் செயல்களில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது என ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வண்டிபெரியார்
வண்டிபெரியார்

இது குறித்து அந்தச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ''முல்லைப்பெரியாறில் முன்னறிவிப்பின்றி தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் ஆற்றின் கரையோரத்திலுள்ள வண்டிப்பெரியார், வல்லக்கடவு ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது எனக் கூறி சில அரசியல் கட்சியினர் அந்தப் பகுதி மக்களை சாலைக்கு வரவழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவைக்கின்றனர்.

முல்லைப்பெரியாறிலிருந்து இடுக்கி நோக்கிச் செல்லும் ஆற்றின் வழித்தடம் பள்ளத்தாக்கில் செல்லக்கூடியது என்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. அணை மதகுகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்தாலும் 1,20,000 கனஅடி வரை இந்த ஆற்றில் தாராளமாக தண்ணீர் செல்லும். ஆனால் 8,000 கனஅடி தண்ணீர் திறந்தபோதே வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல முல்லைப்பெரியாறிலிருந்து இடுக்கி நோக்கிச் செல்லும் ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வண்டிப்பெரியார், சப்பாத்து ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரையில் துணி, பாத்திரம் கழுவும் அளவுக்கு ஆற்றை ஒட்டி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் சில வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதைக் காரணமாகக் காட்டி மக்களை ஏமாற்றி போராடவைத்து முல்லைப்பெரியாறு அணை அருகே மஞ்சமலை பகுதியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் புதிய அணைகட்ட வேண்டும் என்பதே கேரள அரசின் நோக்கம்.

முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு

மேலும், வண்டிப்பெரியார் கம்பிப்பாலம் பகுதியில் அதிக நீர்வரத்து இருப்பதற்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விடப்பட்டது காரணமல்ல. முல்லைப்பெரியாறு நீரை பம்பை டேம் ஹெச், ஹெவி டேம், சபரிகிரி டேம் போன்ற செக் டேம்களை அமைத்து தண்ணீரை மேற்குப் பகுதிக்குத் திருப்பிக்கொண்டுவந்து வண்டிப்பெரியார் கம்பிப்பாலம் பகுதியில் சேர்க்கின்றனர். இதுவே அந்தப் பகுதியில் அதிகமாக தண்ணீர் செல்ல காரணமாக இருக்கிறது'' என்றார்.