Published:Updated:

``பட்டினிச் சாவு இல்லையா..?" - விழுப்புரம் சிறுவன் மரணத்தைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் கேள்வி!

உச்ச நீதிமன்றம்

நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளைச் சேகரித்து, அவற்றை அறிக்கையாகச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமுதாய உணவகங்களை அமைத்து பட்டினிச் சாவுகளைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், ``விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அவரின் உடல் உடற்கூறாய்வு அறிக்கையில் குடலில் உணவு இல்லாததால் பட்டினிச் சாவு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என எப்படிக் கூற முடியும்? நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளைச் சேகரித்து அவற்றை மத்திய அரசு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

பட்டினிச் சாவு
பட்டினிச் சாவு
Representational Image | Pixabay

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியான, உலக நாடுகளில் எந்த அளவுக்கு `பட்டினி' இருக்கிறது என்பது தொடர்பான அறிக்கையில், மதிப்பிடப்பட்ட 116- நாடுகளில் இந்தியா 101-வது வரிசையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!