Published:Updated:

அமைச்சர்களுக்கு செக்... அதிகாரிகளுக்கு அலர்ட்! - முடக்கிவிடும் முதல்வர்

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

``அமுதா ஐ.ஏ.எஸ் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர். அவரால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மிக வேகமாக வளர்ச்சிகளை ஈட்டும்” என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.

துறையின் அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே அந்தத் துறையின் அதிகாரியை முதல்வர் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களுக்குக் குட்டுவைக்க அதிகாரிகளை முதல்வர் கையில் எடுத்திருக்கிறாரோ என்கிற பேச்சு கோட்டைக்குள் எழுந்துள்ளது.

ஸ்டாலின்- பெரியகருப்பன்- அமுதா ஐ.,ஏ.எஸ்
ஸ்டாலின்- பெரியகருப்பன்- அமுதா ஐ.,ஏ.எஸ்

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நேற்று மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், அந்தத் துறையின் செயலாளர் அமுதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழக அரசு பெண்களுக்கு அளித்துவரும் நலத்திட்டங்களையும், சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் அந்தக் கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து இந்தத் துறையின் செயலாளராக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். அவரால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மிக வேகமாக வளர்ச்சிகளை ஈட்டும்” என்று தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரியை முதல்வர் புகழ்ந்து பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியிலும், அமைச்சர்கள் மத்தியிலும் விவாதமாக மாறியுள்ளது. இது குறித்து முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``அமுதாமீது முதல்வருக்கு நல்ல மரியாதை உள்ளது. ஏற்கெனவே அமைச்சர் பெரிய கருப்பன் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு நல்ல ஒப்பீனியன் இல்லை. அதனாலேயே அமுதாவை அந்தத் துறையின் செயலாளராக நியமனம் செய்து, பெரியகருப்பனை கட்டுப்படுத்தியுள்ளார். அவர் மட்டுமல்ல, சில அமைச்சர்களின் செயல்பாடுகளைத் தன் பிடிக்குள் வைத்திருக்கவே முதல்வரும் விரும்புகிறார். அதற்காகவே அதிகாரிகள் சிலரையும் முதல்வர் தன் நேரடி தொடர்பில் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வணிக வரித்துறைக்கு பணீந்தர ரெட்டியை நியமனம் செய்ததன் காரணமே, அந்தத் துறையின் அமைச்சரும் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தன்னிச்சையாகச் சில முடிவுகளை எடுத்தது அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. அமைச்சரைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பணீந்தர ரெட்டியை அங்கு முதல்வர் நியமித்துள்ளார். அந்தத் துறை மட்டுமல்ல, வருவாய்த்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் முதல்வருடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறார்கள்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

பொதுப்பணித்துறையில் நடக்கும் எல்லா விவரங்களும் முதல்வர் அலுவலகத்துக்கு உடனடியாக வந்துவிடுகின்றன. இதைத் தவிர பல அமைச்சர்களின் அலுவலகங்களிலும் முதல்வர் சார்பில் ஒரு உதவியாளரை நியமித்திருக்கிறார்கள். அவர்களது வேலையே அமைச்சர்களின் மூவ்களை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிவிப்பதுதான். சில மூத்த அமைச்சர்கள் இந்த நியமனத்துக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் தரப்பில் இதைத் தடுக்க முடியாது என்று கடுமை காட்டியதால் வேறு வழியில்லாமல் அனைத்து அமைச்சர்களுமே இவர்களைப் பணிக்கு வைத்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல்வர், அமைச்சர்களை நம்பாமல் இல்லை. ஆனால் அரசுத் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குச் சென்றடைய வேண்டும். அதற்கு அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே அமைச்சரைச் சுற்றி இருந்தால் அங்கு முறைகேடுகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் சிக்கலுக்குரிய அமைச்சர்களுடன், தனக்குவேண்டிய அதிகாரிகளைப் பணியில அமர்த்தி, அமைச்சர்களுக்கு முதல்வர் செக் வைத்துள்ளார். அந்த வகையில்தான் அமுதாவை பெரியகருப்பன் துறைக்கு செயலாளராக முதல்வர் நியமித்து அந்தத் துறையின் செயல்பாடுகளை அதிகாரி மூலம் கட்டுப்படுத்திவருகிறார்” என்கிறார்கள்.