Published:Updated:

``காங்கிரஸை பலவீனப்படுத்த நான் எதற்கு... ராகுல் காந்தியே போதாதா?!" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``இந்த கூட்டணி அரசியல் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்த அரசியலை அவர்களிடமே விட்டு விடுங்கள்." - அரவிந்த் கெஜ்ரிவால்

``காங்கிரஸை பலவீனப்படுத்த நான் எதற்கு... ராகுல் காந்தியே போதாதா?!" - அரவிந்த் கெஜ்ரிவால்

``இந்த கூட்டணி அரசியல் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்த அரசியலை அவர்களிடமே விட்டு விடுங்கள்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கப்பட்ட நாள்முதல், அதனை பா.ஜ.க விமர்சித்துவரும் அதேவேளையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் காங்கிரஸைத் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி மாநிலக்கட்சியாக அறிவிக்கப்பட்ட கோவாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் பா.ஜ.க-வுக்கு தாவியதையடுத்து, காங்கிரஸ் அவ்வளவுதான் அதன் கதை முடிந்துவிட்டது என ஆத் ஆத்மி கூறிவந்தது. மேலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தால், அவர்கள் பாஜகவுக்கு தான் போவார்கள் என்றும் குற்றம்சாட்டியது ஆம் ஆத்மி.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில் கெஜ்ரிவால், தற்போது மீண்டும் காங்கிரஸை விமர்சித்ததோடு, 2024-ல் பா.ஜ.க அல்லாத ஆட்சியமைப்பிக்காதற்கான, நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

டெல்லியிலுள்ள தனியார் ஊடக அரங்கில் நேற்று பேசிய கெஜ்ரிவால், ``அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதென்பது, இந்தியாவை நம்பர் ஒன் ஆக்கக்கூடிய கூட்டணியை உருவாக்காது. இந்தியாவின் 130 கோடி மக்கள் கூட்டணியால்தான் இந்தியா உலகின் முதல் இடத்தைப் பிடிக்கும்.

ராகுல், கெஜ்ரிவால் - பாஜக
ராகுல், கெஜ்ரிவால் - பாஜக

இங்கு நான் யாருக்குமே எதிரானவன் அல்ல. ஆனால் இந்த கூட்டணி அரசியல் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்த அரசியலை அவர்களிடமே விட்டுவிடுங்கள். மேலும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள் அல்லது மின்சாரம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் என்னைக் கூப்பிடுங்கள். நான் ஒரு ஐஐடி பொறியாளர் என்பதால் அந்த பிரச்னைகளைச் சரிசெய்வேன். அதோடு, கூட்டணி எப்படிச் செயல்படுகிறது, சீட் பகிர்வு பற்றியெல்லாம் என்னிடம் நீங்கள் கேட்டால், அவையனைத்தும் எனக்கு அப்பாற்பட்டது என்பேன்" என்று தெரிவித்தார்.

மேலும் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வின் பி டீமாக செயல்பட்டு காங்கிரஸைப் பலவீனப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கெஜ்ரிவால், "வெளிப்படையாகச் சொல்லுங்கள், காங்கிரஸைப் பலவீனப்படுத்த நான் தேவையா... ராகுல் காந்தி மட்டுமே போதாதா..." எனக் கிண்டலாக பதிலளித்தார்.