Published:Updated:

``அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை..." - பட்டினப்பிரவேசம் விவகாரமும் தி.க விளக்கமும்

பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேசத்துக்கு தி.மு.க அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து தி.க தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை வெளியிட்டார் என்றாலும், அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறாராம்.

``அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை..." - பட்டினப்பிரவேசம் விவகாரமும் தி.க விளக்கமும்

பட்டினப்பிரவேசத்துக்கு தி.மு.க அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து தி.க தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை வெளியிட்டார் என்றாலும், அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறாராம்.

Published:Updated:
பட்டினப்பிரவேசம்

தமிழகத்தின் பழைமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம். 16-ம் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டுவருகிற இம்மடத்தில் ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப்பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக, 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்துவருகிறார். இந்த ஆண்டுக்கான பட்டினப்பிரவேசத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மனிதனை மனிதனே சுமப்பது நியாயமில்லை என்ற பிரச்னை கிளம்பியதால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப்பிரவேசத்துக்குத் தடைவிதித்தார்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

பட்டினப்பிரவேசம் நடத்தப்படுவதற்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியதோ, அதே அளவுக்கான எதிர்ப்பு அது தடை செய்யப்பட்டபோதும் கிளம்பியது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் இது குறித்துப் பேசினார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, `இவ்விஷயத்தில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார்’ என்று சொல்லிவந்தார். திடீரென மே 9-ம் தேதி பேட்டியளித்த தருமபுரம் ஆதீனம், ‘பட்டினப்பிரவேசத்துக்கு முதல்வர் வாய்மொழி அனுமதி அளித்துவிட்டார்’ என்று அறிவித்தார். இது ஒருதரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியபோதிலும், மற்றொரு தரப்பை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாகக் கூட்டணிக் கட்சிகள் சில இவ்விஷயத்தில் தி.மு.க அரசு மீது அதிருப்தியில் உள்ளன. அதிலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், ``தி.மு.க ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணியவைப்பது ஒரு காவித் திட்டம். இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அன்று சுட்டிக்காட்டியதுபோல, பெரும்பான்மை மக்கள் நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிகப் போர்வை போர்த்திய நரியர்கள். எனவே, இது போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கினால், அடுத்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க அரசு எந்த ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பையும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.

கி.வீரமணி
கி.வீரமணி

ஆன்மிகம் என்பதைவிட, இதன் பின்னே பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் பின்னணி இருப்பதை மறந்துவிடக் கூடாது. மதவெறி காவி சக்திகள் துள்ளிக் குதித்தாலும், தமிழக அரசின் இந்தப் பின்வாங்கல் தோல்வி என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எண்ணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியைத் தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்துவிடக் கூடாது.

கி.வீரமணி - ஸ்டாலின்
கி.வீரமணி - ஸ்டாலின்

மனிதனை மனிதனே தூக்கிச் சுமப்பதற்கு, தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன்வருகிறார்கள் என்கிற வாதம் அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கக்கூடியதல்ல. தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. 'மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத்துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு அலைய வேண்டுமா?' என்பதுதான் அது!” என்றவாறு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கி.வீரமணி.

கலி.பூங்குன்றன்
கலி.பூங்குன்றன்

`பல்லக்குப் பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் மீது கி.வீரமணி அதிருப்தியில் இருக்கிறாரா?’ என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனிடம் கேட்டோம். ``அதிருப்தி என்று சொல்வது சரியல்ல. தன்னுடைய கருத்தை ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அதேநேரம், அரசுக்கான ஆதரவு தொடரும் என்று சொல்லித்தானே இருக்கிறார்... கொள்கைரீதியிலான பிரச்னைகள் வரும்போது, எங்களது நிலைப்பாட்டை சொல்லித்தானே ஆக வேண்டும்... தடை விதித்த மயிலாடுதுறை வட்டாட்சியர் வாயிலாகவே அனுமதியும் கொடுக்கப்பட்டுவிட்டது. வெளிப்படையாக முதல்வரே அறிவிக்கும் அளவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை இந்த விவகாரம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism