Published:Updated:

``ஞானவாபி மசூதி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல... நீரூற்று" - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஞானவாபி மசூதி விசாரணைக்குழு ஆய்வு நடத்தியதில், மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு சீல் வைத்து, பொதுமக்கள் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

``ஞானவாபி மசூதி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல... நீரூற்று" - அசாதுதீன் ஒவைசி

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஞானவாபி மசூதி விசாரணைக்குழு ஆய்வு நடத்தியதில், மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு சீல் வைத்து, பொதுமக்கள் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுப்புறச் சுவர்களில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி வேண்டி வழக்கு தொடரப்பட்டதையடுத்து, விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, மசூதியில் மூன்று நாள் ஆய்வு நடைபெற்றது. இந்தச் சோதனையில் 3-ம் நாளான நேற்று நடந்த வீடியோ ஆய்வில், விசாரணைக்குழுவுடன் சென்ற மனுதாரர் சோகன் லால் ஆர்யா, மசூதியினுள் சிவலிங்கம் இருப்பதாகவும், உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் விசாரணைக்குழு கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து விசாரணைக்குழுவின் சோதனை முடிவடைந்ததையடுத்து வாரணாசி நீதிமன்றம், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும், அப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை தடைவிதிக்குமாறும், மாவட்ட நீதிபதி கவுஷல் ராஜ் சர்மாவுக்கு உத்தரவிட்டது.

ஞானவாபி  மசூதி
ஞானவாபி மசூதி

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, நேற்று பேசிய அசாதுதீன் ஒவைசி, ``விசாரணைக்குழுவின் ஆய்வில் மசூதியினுள் கண்டுபிடிக்கப்பட்டது ஓர் நீரூற்றுதானே தவிர சிவலிங்கம் அல்ல. இந்த மாதிரியான நீரூற்று அனைத்து மசூதிகளில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற ஆணையரால் ஏன் கோரிக்கை எழுப்பப்படவில்லை... மேலும், சிவலிங்கம் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் இடத்துக்கு சீல் வைத்த உத்தரவு, 1991 சட்டத்தை (வழிபாட்டுத்தலங்கள் சட்டம்) மீறுவதாகும். மேலும், இது போன்ற செயல்களால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவிழந்து வருவதால் நான் வேதனைப்படுகிறேன்" என்று கூறினார்.

ஞானவாபி மசூதியில் விசாரணைக்குழுவின் மூன்று நாள் ஆய்வு முடிந்துள்ள நிலையில், இது தொடர்பான மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism