Published:Updated:

`3 ஆண்டுகளுக்கெல்லாம் இந்த ஆட்சி தாங்காது!’ - சித்தராமையா ஆரூடம்

 Siddaramaiah
News
Siddaramaiah

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் எனத் தெரிவித்துள்ளார் சித்தராமையா.

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி தலைமையிலான ஆட்சி ஒரு மாதத்துக்கு முன்பு கலைக்கப்பட்டது. ம.ஜ.த தலைவர் குமாரசாமிக்குப் போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் அவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், பா.ஜ.க-வின் எடியூரப்பா புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 Siddaramaiah
Siddaramaiah

அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி களைக்கப்பட்ட பிறகு, அங்குள்ள மூன்று பெரும் கட்சிகளுக்கு இடையில் கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. காங்கிரஸும் ம.ஜ.த-வும் ஒரு புறம் சண்டையிட்டுக்கொள்ள, மறுபுறம் காங்கிரஸும் பா.ஜ.க-வும் போட்டிப்போடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படியான சூழலில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆளும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று மைசூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும் போது, ``நான் முன்னதாகக் கூறியதுபோல் இன்னும் சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரும்; அதுமட்டும் உறுதி

 Siddaramaiah
Siddaramaiah

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த-வை சேர்ந்த 17 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்துக்கொண்டு எப்படி மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடக்கும் தைரியத்தில் பதவிக்காக ஆசைப்பட்டு அங்கு சென்றுள்ளனர். கட்சியின் கொள்கைகளை மதிக்காதவர்கள், அரசியல் நடைமுறைகள் தெரியாத எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாள்களுக்குப் பிழைக்க முடியும் என நான் பார்க்கிறேன்.

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து கர்நாடக அரசு முடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக அரசு இங்கு எந்த வேலையும் செய்யவில்லை. நேற்றுகூட மங்களூருவில் நான் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, விரைவில் இடைத்தேர்தல் வரும் அதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலும் விரைவில் வரும். எனவே, அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.