Published:Updated:

``5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் பணியிருக்கும் அதிகாரிகளே... உஷார்” - எச்சரித்த விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

``தி.மு.க ஊராட்சித் தலைவர் தொடங்கி திமுக ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் என திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் இந்த ஆட்சியில் திருப்தி இல்லை.” - விஜயபாஸ்கர்

``5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் பணியிருக்கும் அதிகாரிகளே... உஷார்” - எச்சரித்த விஜயபாஸ்கர்

``தி.மு.க ஊராட்சித் தலைவர் தொடங்கி திமுக ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் என திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் இந்த ஆட்சியில் திருப்தி இல்லை.” - விஜயபாஸ்கர்

Published:Updated:
விஜயபாஸ்கர்

மின் கட்டண கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசினார். அப்போது கூட்டத்தில் பேசியவர், ``தி.மு.க ஊராட்சித் தலைவர் தொடங்கி திமுக ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் என திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் இந்த ஆட்சியில் திருப்தி இல்லை.

``5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் பணியிருக்கும் அதிகாரிகளே... உஷார்” - எச்சரித்த விஜயபாஸ்கர்

யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள். அதிமுக ஆட்சியில், யாரையும் பழிவாங்கவில்லை. தொந்தரவு செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் திமுக ஒப்பந்ததாரர்கள் உட்பட பலரும் நிம்மதியாக தொழில் செய்தனர். இன்று மிகப்பெரிய அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. இந்த 1வருடம், 8 மாதத்தில் மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடக்கவில்லை. தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டி, லேப்டாப் திட்டங்களை நிறுத்திவிட்டனர். இதையெல்லாம், கவனிக்கத் தவறியவர்கள் அ.தி.மு.கவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்காங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சி தான். ஒரு சில அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கின்றனர். ஓராண்டு, இரண்டாண்டுல ஒய்வு பெறும் அதிகாரிகள் தப்பிச்சி போயிடலாம். ஐந்தாண்டு, ஆறாண்டு, பத்தாண்டு எதிர்காலம் பணியிருக்கும் அரசு அதிகாரிகள் உங்கள் நன்மை கருதி நியாயத்தோடு நடந்துகொள்ள வேண்டும். உங்கள் நலன் எதிர்காலம் கருதி நியாயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை பணிவோடு எச்சரிக்க விரும்புகிறேன்" என்றார். கூட்டத்தில் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

``5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் பணியிருக்கும் அதிகாரிகளே... உஷார்” - எச்சரித்த விஜயபாஸ்கர்

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, ``தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின் மாணவர்கள் இரண்டு " நீட்" தேர்வுகள் எழுதிவிட்டனர். ஆனால், நீட் தேர்வில் இருந்து பாதிப்பை மீட்டெடுக்க, 7.5% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு. இதனால், 546அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்" என்றார்.

இதற்கிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது டவுன் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.