Election bannerElection banner
Published:Updated:

ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐடி ரெய்டு!

சபரீசன்
சபரீசன்

தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த ரெய்டு என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திவருகின்றனர்.

நீலாங்கரையிலுள்ள செந்தாமரையின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில் திமுக-வின் முக்கியப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தேர்தல் பரப்புரைக்காக ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், ஸ்டாலினின் நிழலாகச் செயல்படுவதாகக் கருதப்படும் மருமகன் சபரீசன் வீட்டில் இன்று நடைபெறும் ஐ.டி ரெய்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த ரெய்டு என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு