Published:Updated:

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீர் ராஜினாமா... காரணம் என்ன?

இத்தாலி பிரதமர் ( ட்விட்டர் )

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீர் ராஜினாமா... காரணம் என்ன?

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
இத்தாலி பிரதமர் ( ட்விட்டர் )

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். தற்போது இத்தாலியில் பணவீக்கம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துவருவதால், இத்தாலி ஒரு மோசமான பொருளாதார நிலையை எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான சூழலில் கூட்டணிக் கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இத்தாலி பிரதமர்
இத்தாலி பிரதமர்
ட்விட்டர்

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துப்பட்டது. இந்தச் சூழலில், நேற்று மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரல்லாவிடம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை, செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!