Published:Updated:

``துணிச்சலோடு செய்த ஒரு பெண்ணின் இந்தச் செயல் பாராட்டப்பட வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு

சேகர் பாபு

முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

``துணிச்சலோடு செய்த ஒரு பெண்ணின் இந்தச் செயல் பாராட்டப்பட வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு

முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Published:Updated:
சேகர் பாபு

மாண்டஸ் புயல் கடந்த 10-ம் தேதி அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர், புயல் பாதித்த இடங்களுக்கு குழுவாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

ஆய்வின்போது ஸ்டாலின்
ஆய்வின்போது ஸ்டாலின்

அப்போது காசிமேடு பகுதியில் ஆய்வு முடித்துவிட்டு அவர்கள் திரும்புகையில், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மேயர் பிரியா - ஆணையர் ககன்தீப் சிங்
மேயர் பிரியா - ஆணையர் ககன்தீப் சிங்

அதைத் தொடர்ந்து, முதல்வர் காசிமேடு வருவதற்கு முன்னர் மேயர் பிரியாவும், ஆணையர் ககன்தீப் சிங் இருவரும் வந்துவிட்டனர். அவர்கள் வாகனம் துறைமுகத்துக்கு வெளியே இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வந்துவிட்டார். அதனால், ஸ்டாலினுடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட மேயரும் ஆணையரும் கான்வாயில் ஏறியதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது அவருடன் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக மேயர் அப்படிச் சென்றிருக்கிறார். மேலும், அந்த வாகனத்தில் முதல்வரும் இல்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

பாதுகாவலர்களை இறக்கிவிட்டு பிரியா அந்த வாகனத்தில் ஏறவில்லை. அது யதார்த்தமாக நடந்தது. கடந்தகாலங்களில் மேயர்கள் வெளியேவே வரக் கூடாது என உத்தரவு பிறத்தவர்களெல்லாம் உண்டு. காவல் நிலையத்தில் மேயரின் கைகள் உடைக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

ஆனால், இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பாரதியாரின் பிறந்ததினம் கொண்டாடப்படும் இந்த நாள்களில், துணிச்சலோடு செய்த ஒரு பெண்ணின் இந்தச் செயல் பாரட்டப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.