Published:Updated:

``குறுக்குவழியில் வாக்குகளைப் பெறுவது எளிது; ஆனால் அந்த அரசியல் நாட்டை அழித்துவிடும்!" - மோடி

பிரதமர் மோடி

`குறுக்குவழி அரசியலிலிருந்து விலகியிருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்' எனப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

``குறுக்குவழியில் வாக்குகளைப் பெறுவது எளிது; ஆனால் அந்த அரசியல் நாட்டை அழித்துவிடும்!" - மோடி

`குறுக்குவழி அரசியலிலிருந்து விலகியிருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்' எனப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் மாநிலம், தியோகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``குறுக்குவழியில் வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால் குறுக்குவழி அரசியல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் இது போன்ற குறுக்குவழி அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும். இன்று குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறுக்குவழி அரசியலிலிருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

குறுக்குவழி அரசியல் செய்பவர்கள் புதிய விமான நிலையங்களைக் கட்ட மாட்டார்கள், புதிய நவீன நெடுஞ்சாலைகளைக் கட்ட மாட்டார்கள். குறுக்குவழி அரசியல் செய்பவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கக் கடுமையாக உழைக்க மாட்டார்கள். பாஜக அரசு அரசியல் கலாசாரம், நிர்வாக மாதிரியைக் கொண்டுவந்திருக்கிறது.

மோடி
மோடி

இந்தியா பக்தி, ஆன்மிகம் மற்றும் யாத்திரைத் தலங்களின் பூமி. நம்பிக்கை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்த அரசு முதலீடுகளை மேற்கொண்டுவருகிறது. இன்று நாங்கள் தொடங்கியிருக்கும் திட்டங்கள் ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!