Published:Updated:

``ஈகோவுக்கான நேரமல்ல இது” - மம்தா முடிவால் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா அதிருப்தி

எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

``குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், வாக்களிப்பதிலிருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்துக்கான நேரமல்ல." - எதிர்க்கட்சி வேட்பாளர் ஆல்வா

``ஈகோவுக்கான நேரமல்ல இது” - மம்தா முடிவால் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா அதிருப்தி

``குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், வாக்களிப்பதிலிருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்துக்கான நேரமல்ல." - எதிர்க்கட்சி வேட்பாளர் ஆல்வா

Published:Updated:
எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கரை, கடந்த வாரம் பாஜக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் சார்பாக மார்கரெட் ஆல்வா பொது வேட்பாளராகப் போட்டியிடுவார் என சரத் பவார் அறிவித்தார். இப்படியிருக்க நேற்று திடீரென, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸின் இத்தகைய திடீர் முடிவு எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``எதிர்க்கட்சிகள் யாவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என இன்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் மார்கரெட் ஆல்வா, திரிணாமுல் காங்கிரஸின் முடிவு குறித்து ட்விட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா
எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

மார்கரெட் ஆல்வா தனது ட்வீட்டில், ``துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், வாக்களிப்பதிலிருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்துக்கான நேரமல்ல. இது தைரியம், தலைமை மற்றும் ஒற்றுமைக்கான நேரம். தைரியத்தின் உருவமான மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளுடன் துணை நிற்பார் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.