Published:Updated:

``2024 தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முடியும்... ஆனால்..!" - பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணக்கு

பிரசாந்த் கிஷோர்

``2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை நிச்சயமாக வீழ்த்த முடியும்’’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

``2024 தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முடியும்... ஆனால்..!" - பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணக்கு

``2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை நிச்சயமாக வீழ்த்த முடியும்’’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

இந்தியாவில் தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. பாஜக தொடர்ச்சியாக 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நீண்ட நெடிய பாரம்பர்யம்கொண்ட காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துக்கொண்டேவருகிறது. இந்த நிலையில், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக எனப் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அண்மையில் என்.டி.டி.வி-க்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சிகளின் வியூகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``தற்போது தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றாலும்கூட வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை நிச்சயமாகத் தோற்கடிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

2024-ம் ஆண்டு பாஜக-வை நிச்சயமாக வெல்ல முடியும். ஆனால், தற்போது உள்ள கூட்டணிக் கட்சிகளால் அது சாத்தியமா என்பது சந்தேகம்தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை எதிர்கொள்ள நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சித்தாந்தரீதியாகக் காங்கிரஸை பலவீனமடைய அனுமதித்தால், அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" என்று கூறினார்.

மேலும், ``பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் சுமார் 200 மக்களவை இடங்கள் இருக்கின்றன. அதில் பாஜக-வால் சில இடங்களை மட்டுமே வெல்ல முடிகிறது. மீதமுள்ள 350 இடங்களில்தான் பாஜக வெற்றிபெறுகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் திட்டத்தை இதற்கு ஏற்றவாறு மாற்றினால் அதிக இடங்களை வெல்ல முடியும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism