Published:Updated:

ஜெ.தீபாவே தன் மகளுக்காக எழுதிய கவிதை, வருகை தரும் அரசியல் பிரபலங்கள் - பெயர் சூட்டு விழா ஹைலைட்ஸ்!

குழந்தையுடன் ஜெ.தீபா, மாதவன்

நாளை ஜெ.தீபா- மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது. அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் கவிதையை எழுதியவர் ஜெ.தீபா என்று அச்சிடப்பட்டிருக்கிறது. ஜெ.தீபாவே தனது மகளுக்கு எழுதிய கவிதை இதோ...

Published:Updated:

ஜெ.தீபாவே தன் மகளுக்காக எழுதிய கவிதை, வருகை தரும் அரசியல் பிரபலங்கள் - பெயர் சூட்டு விழா ஹைலைட்ஸ்!

நாளை ஜெ.தீபா- மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது. அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் கவிதையை எழுதியவர் ஜெ.தீபா என்று அச்சிடப்பட்டிருக்கிறது. ஜெ.தீபாவே தனது மகளுக்கு எழுதிய கவிதை இதோ...

குழந்தையுடன் ஜெ.தீபா, மாதவன்

ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அரசியல் பிரபலங்கள் உட்படப் பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ஜெ. தீபா. குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தலில் பரபரப்பாக இருக்கும் ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்து பத்திரிகைக் கொடுத்திருக்கிறார். “அரசியல் காரணங்களுக்காக அல்ல. குடும்ப நிகழ்ச்சிக்காக ஓ.பி.எஸ் அவர்களை அழைத்திருக்கிறேன்” என்று தீபா விளக்கம் கூறிய நிலையில், நாளை 5-ம் தேதி இந்தப் பெயர் சூட்டு விழா நடைபெற இருக்கிறது.

குழந்தையுடன் ஜெ.தீபா, மாதவன்
குழந்தையுடன் ஜெ.தீபா, மாதவன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்குக் கடந்த அக்டோபர் 31-ம் தேதி குழந்தை பிறந்தது. அதனைத் தனது பிறந்த நாளான நவம்பர் 10-ம் தேதி அறிவித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார் தீபா.

“கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் என் மகள். என் அத்தையின் ஆசீர்வாதம், என் அம்மாவின் ஆசீர்வாதம், மாதவனின் அம்மா ஆசீர்வாதத்தால்தான் இந்த வாழ்நாள் சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தாய்மையில் பூரித்துப்போனேன். இந்த நேரத்தில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பது நாங்கள்தான்” என்று பேரானந்தத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில்தான், நாளை தி.நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டுவிழா நடைபெற இருக்கிறது. மகளுக்காக ஜெ.தீபாவே அழைப்பிதழில் கவிதையும் எழுதியுள்ளார்.

"கீதையின் பொருளாக எது நடக்க இருக்கின்றதோ

அது நன்றாகவே நடக்கும்.

புல்லாங்குழலின் இசையாக

மயிலிறகுபோல் இதமாக இம்மண்ணில்

பாதங்கள் பதிக்க வந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

இல்லறமே நல்லறமாய்

மங்காத நட்சத்திரமாய்

ஒளி சேர்க்கவந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

தாய்மை என்ற சொல்லுக்கு

என் வாழ்வில் அர்த்தம் அளித்து

அம்மா அப்பா என்று நீ அழகாய்

குறும்புகள் செய்ய காத்திருக்கிறோம்.

அருமை மகளே நீ

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க"

ஜெ.தீபா
ஜெ.தீபா

– கவிதை எழுதியது திருமதி ஜெ.தீபா மாதவன் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகள் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு!