Published:Updated:

`துன்பத்தில் தவிப்பவர்களை அணுக முயற்சி' - விவசாயிகளுக்கான ஜெகன்மோகனின் புதிய திட்டம்!

கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் மட்டும் 1513 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என ஜெகன் மோகன் ரெட்டி இந்தக் கூட்டத்தில் பேசினார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, மாணவர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, சத்துணவுப் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு என அறிவிப்பு வெளியிட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

விவசாயிகளுக்கு தலா ரூ.12,000 வழங்கும் திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். சந்திரபாபு நாயுடுவின் முந்தைய அரசாங்கம் சார்பில் சுகிபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அதை ரத்து செய்தார்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் வழங்குவதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று காணொலிக் காட்சியின் மூலம் உரையாடினார். அப்போது விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் பேசியவர், கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் மட்டும் 1513 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் சந்திர பாபு நாயுடுவின் அரசாங்கத்தில் 391 குடும்பத்தினருக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளனர். இதன் மூலம் முந்தைய அரசானது விவசாயிகளை காக்கத்தவறிவிட்டனர். இந்த அரசானது விவசாயிகளுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும். நிவாரணங்கள் பயணாளர்களுக்கு சரியாகச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

துன்பத்தில் தவிக்கும் விவசாயிகளை இந்த அரசானது அணுக முயற்சி செய்கிறது. இழப்பீடு வழங்க தகுதியுள்ள குடும்பங்களை மாவட்ட அதிகாரிகள் தரவுகள் மூலம் சரிபார்க்க வேண்டும். மேலும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.