Published:Updated:

`தற்போது நீங்கள் எது கேட்டாலும் மத்திய அரசு செய்யும்!’ - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்

சத்யா கோபாலன்

காஷ்மீர் ஆப்பிள்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Satya Pal Malik
Satya Pal Malik ( ANI )

காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காகப் பல ஆயிரம் பாதுகாப்புப் படையிடர் குவிக்கப்பட்டனர். இணையம் போன்ற அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தடை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் அங்குள்ள பாதுகாப்புப்படை வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை. மேலும், தகவல் தொடர்பும் சரிசெய்யப்படவில்லை.

Satya Pal Malik
Satya Pal Malik
ANI

இந்நிலையில், விவசாயப் பொருள்களைச் சந்தைகளில் விற்கக் கூடாது எனத் தீவிரவாதிகள் அச்சுறுத்துவதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னர், காஷ்மீர் விவசாயப் பிரதிநிதிகள் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் ஆப்பிள்களை இனி மத்திய அரசே கொள்முதல் செய்துகொள்ளும் என அமித்ஷா அறிவித்தார்.

சட்டப்பிரிவு 370 ரத்து டு கைது நடவடிக்கை வரை - காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது என்ன? #Timeline

ஏ, பி, சி என்ற எல்லா தர ஆப்பிள்களும் 12 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்யப்படும் என்றும் இதற்கான மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். விவசாயிகளிடமிருந்து நேர்மையான முறையில் கொள்முதல் நடக்கும் என உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அரசின் முதல் கொள்முதலைக் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தற்போது டெல்லியில் உங்களுக்கு நிறைய அனுதாபம் உள்ளது. மத்திய அரசிடம் நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். இன்று மொத்த இந்தியாவும் உங்களுக்குச் சொந்தம். அதனால் எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும். இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை.

Satya Pal Malik
Satya Pal Malik
ANI

காஷ்மீர் மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முடிந்த வரலாற்றுச் சக்கரம் திரும்பாது. அதை யாராலும் மாற்ற இயலாது. காஷ்மீர் விவசாயிகளை அச்சுறுத்துபவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அவர்கள் தங்களின் நடவடிக்கையை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திப்பீர். நாங்கள் விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.