Published:Updated:

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர்!

ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ( ட்விட்டர் )

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில், ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர்!

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில், ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

Published:Updated:
ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ( ட்விட்டர் )

2014-ல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்த ஜெய் பிரகாஷ் மஜூம்தார், மேற்கு வங்க பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக பதவி வகித்துவந்தார். இவர்மீது அண்மையில் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஜெய் பிரகாஷ் மஜூம்தார் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜூம்தாரின் உத்தரவின் பேரில், மேற்குவங்க பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் மஜூம்தார் மற்றும் பா.ஜ.க மேற்கு வங்க மாநிலத் துணைத் தலைவர் ரித்தேஷ் திவாரி ஆகியோர் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடியும் வரை தற்காலிகமாகக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸில் இணையும் நிகழ்வில்
ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸில் இணையும் நிகழ்வில்
ட்விட்டர்

பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பிரகாஷ் மஜூம்தார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``மேற்கு வங்க பா.ஜ.க முக்கியப் பிரச்னைகளைப் புறக்கணிக்கிறது. மேற்கு வங்க தேர்தலின்போது, ​​மாநிலத்தின் செயல்பாடுகளை மத்திய தலைமைக்குத் தெரிவிக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், சில மத்திய தலைவர்கள் பா.ஜ.க கட்சியின் மேற்கு வங்க செயல்பாடுகளை முடக்க முயல்கின்றனர். அது சரியல்ல என்று அவர்களிடம் கூறினேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பனர்ஜி
மம்தா பனர்ஜி
ட்விட்டர்

இந்த நிலையில், இன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில், ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

அவர் இணைந்தவுடனேயே, திரிணாமுல் காங்கிரஸின் மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஜெய் பிரகாஷ் மஜூம்தார்
ஜெய் பிரகாஷ் மஜூம்தார்
ட்விட்டர்

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் அமோக வெற்றிக்குப் பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உட்பட சில பா.ஜ.க தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.

முகுல், சப்யசாச்சி தத்தா, ராஜீப் பானர்ஜி போன்ற பல முக்கியத் தலைவர்களும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.