Published:Updated:

`நாங்கள் இங்கிலாந்து; தி.மு.க நியூசிலாந்து!'- அமைச்சர் ஜெயக்குமாரின் புதிய ஒப்பீடு

கலிலுல்லா.ச

பிரஸ்மீட்டுகளில் ஏதாவது வித்தியாசமாகப் பேசி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பும் அமைச்சர் ஜெயக்குமார், இம்முறையும் அதேபோல ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அப்போது கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``நான் மட்டும் இந்திய அணியில் இருந்திருந்தால், அணி வெற்றிபெற்றிருக்கும்” என்று பேசி, எல்லோரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். இந்நிலையில், நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியுடன் அரசியலை பொருத்தி, மற்றொரு கருத்து ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்தநாளை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்ஜமின் ஆகியோர் மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.

மீன்வளத்துறை அமைச்சர்
மீன்வளத்துறை அமைச்சர்

. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். கல்விக்காகவும் தமிழுக்காவும் உழைத்தவர் பெருந்தலைவர்'' என்று புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில், ``உலகக் கோப்பை கிரிகெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து தோற்றுவிடுவது போல் மாயத்தோற்றம் இருந்தது. ஆனால், இறுதியில் இங்கிலாந்து வென்றது.

நியூசிலாந்துபோல தி.மு.க வெற்றி பெறுவதுபோல் தோற்றம் இருக்கும். ஆனால், இறுதியில் இங்கிலாந்துபோல் அ.தி.மு.க வெற்றிபெரும்” என்றார். `தூக்கம் கண்களைத் தழுவட்டுமே' என்ற பாடலை மேற்கோள் காட்டி, தென்சென்னை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்
கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்

``நாடாளுமன்றத்தில் அவர் தூங்கிவிழுந்த காட்சிகளைப் பார்த்தோம். தென்சென்னை மக்களுக்கு வாழ்த்துகள்” என கிண்டல் செய்தார். மேலும், செம்மொழி மாநாடு நடத்தி தமிழை அழித்தது தி.மு.க எனவும் அவர் குற்றம் சாட்டினார்.