Published:Updated:

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா: துணை முதல்வர் முன்னிலை... திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா

ஃபீனிக்ஸ் பறவை போன்ற அமைப்புகொண்ட ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவைக் காண தமிழகம் முழுவதுமிருந்து அ.தி.மு.க-வினர் சென்னை மெரினாவில் குவிந்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 79 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்திருக்கிறது. இந்த நினைவிடம் இன்று திறக்கப்படவிருக்கிறது.

அ.தி.மு.க தொண்டர்கள்
அ.தி.மு.க தொண்டர்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு, ஜூன் 28-ம்தேதி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, நினைவிடம் அமைக்க முதற்கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளைக் கடந்த 2018-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அதன் பிறாகு, நினைவிடக் கட்டுமானப் பணிக்கான கூடுதல் நிதி மற்றும் ஐந்து ஆண்டுகள் பராமரிப்புக்கான நிதி ரூ.79.75 கோடியாக உயர்த்தப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடம்

ஃபீனிக்ஸ் பறவை போன்ற அமைப்புகொண்ட இந்த நினைவிடத்தை, இன்று காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமிதிறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதுமிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் சென்னை மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ

ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வமும், சபாநாயர் தனபாலும் இருந்தனர்.

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா: துணை முதல்வர் முன்னிலை... திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகளும் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு