Published:Updated:

`இந்த ஆட்சி கவிழும்; தேர்தலுக்குத் தயாராகுங்கள்!’ - கட்சியினருக்கு குமாரசாமி அட்வைஸ்

சத்யா கோபாலன்

‘நான் அரசியலுக்கு வந்தது, முதல்வரானது அனைத்துமே விபத்து’ என குமாரசாமி பேசியிருந்தார்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதையடுத்து அந்த மாநிலத்தில் அதிக பெரும்பான்மை உடைய பா.ஜ.கவின் எடியூரப்பா கடந்த வாரம் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

 குமாரசாமி ராஜினாமா
குமாரசாமி ராஜினாமா

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி, நான் ஆட்சியமைத்த இரண்டு முறையும் என்னால் முடிந்த நல்ல விஷயங்களை மக்களுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன். தற்போது நான் இவை அனைத்திலுமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று கர்நாடகாவில் மாண்டியாவில் தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் குமாரசாமி. அதில், ``தற்போது நாம் யாருடனும் கூட்டணி அமைக்க வேண்டாம். நமக்கு யார் கூட்டணியும் தேவையில்லை. அதேபோல் எனக்கு எந்தப் பதவி அதிகாரமும் தேவையில்லை. உங்கள் மனதில் இடம் கிடைத்தால் மட்டுமே போதும்.

குமாரசாமி
குமாரசாமி
ANI

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வரவுள்ளது. அதில் நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும், அதற்காக அனைவரும் தயாராக இருங்கள். வரும் தேர்தல் 14 தொகுதிகளுக்கும் இருக்கலாம் அல்லது 224 தொகுதிகளுக்கும் இருக்கலாம். எடியூரப்பா தலைமையில் நடக்கும் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. அது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.