Published:Updated:

``தன் மனைவிக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியிருக்கிறார்..!" - ஜார்கண்ட் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தன் மனைவி மற்றும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

``தன் மனைவிக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியிருக்கிறார்..!" - ஜார்கண்ட் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தன் மனைவி மற்றும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மேலும், ஜார்கண்ட் மாநில அமைச்சரவையில் தொழில் துறையையும், முதல்வர் ஹேமந்த் சோரனே கவனித்து வருகிறார். இந்த நிலையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன் மனைவியின் நிறுவனத்துக்கு 11 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதற்காக, தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது ஜார்கண்ட் மாநில பா.ஜ.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

இது தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரகுபர் தாஸ், ``முதல்வர் ஹேமந்த் சோரன் தன் அலுவலகத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ராஞ்சியில் உள்ள பெஹ்ரா தொழில்துறை பகுதியில் இறைச்சி பதப்படுத்தும் பிரிவு அமைப்பதற்காக, தன்னுடைய மனைவி கல்பனா சோரனுக்கு சொந்தமான ‘சொஹ்ராய் லைவ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு 11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருப்பதாகச் செய்திகள் வெளிகியாகியுள்ளன. தொழில்துறை இலாகாவை முதல்வர் சோரனே கவனித்துவருவதால், இந்த பிரச்னையில் அவரே உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 13(2)-ன் கீழ் சோரனின் செயல்... குற்றமாகக் கருதப்படும்" என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரகுபர் தாஸ், ``சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத் மற்றும் அவரின் பிரதிநிதி பங்கஜ் மிஸ்ரா ஆகியோருக்கும் சாஹிப்கஞ்சில் சுரங்க குத்தகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனது நாடு, எனது ஆட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசு மட்டுமே இப்படிச் செயல்படுகிறது" என சோரன் அரசு மீது குற்றம்சாட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism