Published:Updated:

"72 மணி நேரத்தில் 2 பொய் வழக்குகள்... பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்!" - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ( ட்விட்டர் )

முதல்வரைக் காணவந்த பெண்ணைப் பிடித்துத் தள்ளியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதால், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ முடிவுசெய்திருக்கிறார்.

"72 மணி நேரத்தில் 2 பொய் வழக்குகள்... பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்!" - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ

முதல்வரைக் காணவந்த பெண்ணைப் பிடித்துத் தள்ளியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதால், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சரத் பவார் கட்சி எம்.எல்.ஏ முடிவுசெய்திருக்கிறார்.

Published:Updated:
தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ( ட்விட்டர் )

மும்பை அருகேயுள்ள தானேயில் சத்ரபதி சிவாஜி தொடர்பாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில், காட்சிகள் வரலாற்றைத் தவறாகச் சித்திரிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று மல்டிபிளெக்ஸ் தியேட்டர் மீது தாக்குதல் நடத்தினார். அதனால், காட்சி ரத்துசெய்யப்பட்டதால் பணத்தைத் திரும்பக் கொடுக் கவேண்டும் என்று சிலர் கேட்டதாகத் தெரிகிறது. அவர்களையும் கட்சித் தொண்டர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக ஜிதேந்திர அவாத் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் அவாத் கைதுசெய்யப்பட்டார். ஆனால் மறுநாளே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை தானே அருகே மேம்பாலம் ஒன்றின் திறப்புவிழா நடந்தது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன், ஜிதேந்திர அவாத்தும் கலந்துகொண்டார். விழாவில் முதல்வரைக் காண பா.ஜ.க பெண் நிர்வாகி ரிதா அஸ்கர் ரஷீத் என்பவர் வந்திருந்தார். விழா முடிந்தவுடன் ரிதா முதல்வரைக் காண அவர் அருகில் செல்ல முயன்றார்.

ஜிதேந்திர அவாத்
ஜிதேந்திர அவாத்
ANI

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஜிதேந்திர அவாத். `ஏன் நடுரோட்டில் நிற்கிறாய்?’ என்று கேட்டு அந்தப் பெண்ணின் தோளைப் பிடித்து வலுக்கட்டாயமாக ஓரத்தில் தள்ளியதாகத் தெரிகிறது. இது குறித்து அந்தப் பெண் பின்னர் முதல்வரைச் சந்திக்கும்போது எடுத்து கூறி, அவாத் மீது வழக்கு பதிவுசெய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மும்ப்ரா போலீஸார், ஜிதேந்திர அவாத் மீது பெண்ணைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக (Sexually Harassing ) வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இதையடுத்து, ஜிதேந்திர அவாத் தன் ட்விட்டர் பக்கத்தில், ``72 மணி நேரத்தில் என்மீது இரண்டு பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இதனால் என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். போலீஸாரின் கொடுமையை எதிர்த்து போராடப்போகிறேன். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.